பாவை - 3
"நீங்க விளையாடறீங்களா.? என் அண்ணனை ஒரு பொண்ணு லவ் பண்ணுதா.? இல்ல என்னைய சமாளிக்க இப்படி ஏதாவது சொல்றீங்களா.?" என்று மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்டாள் ஹேமா.
"நான் ஏன்மா பொய் சொல்ல போறேன்.? நான் சொல்றது உண்மை தான்.. உன் அண்ணனைக் கண்டு அந்த பொண்ணே பயந்துட்டு அவ அப்பாகிட்ட சொல்லி பேச சொல்லிருக்கு.. அவங்க அப்பாவும் நம்ம மாறனைப் பத்தி தெரியாம வந்து அவன்கிட்ட போலீஸ் தம்பி போலீஸ் தம்பினு அவ்ளோ கெஞ்சலா பேசிட்டு போறாரு..
இதுல வீட்டு அட்ரஸ் எல்லாம் குடுத்தாச்சு.. இனி பொண்ணு பார்க்க போக வேண்டியது மட்டும் தான் மிச்சம்.." என்று விலாவாரியாக நடந்ததைக் கூறினான் அதிரன்.
இதெல்லாம் உண்மையா.? என்று பெண்ணவள் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்த வேளையில் மாறனே அவர்களிடம் வந்து விட, தங்கையை அங்கு பார்த்ததும் கடுப்புற்றவன் "ஏய் இங்க என்ன பண்ணிட்டு இருக்க.? வேலை தேடறேன்.. வேலை தேடறேனு பொய் சொல்லி அந்த மனுசனை ஏமாத்திட்டு இப்படி ஊர் சுத்திட்டு இருக்கீயா.? இதுல உன்னைய தண்டமா வீட்டுல உட்கார வெச்சு சோறு வேற நான் போட்டுட்டு இருக்கேன்" என்று கத்தினான்.
பொதுவெளியில் அண்ணன் இப்படி பேசியதை ஹேமாவால் தாங்க முடியவில்லை. பொலபொலவென அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்திட, அவளைப் பார்க்க அதிரனுக்கே பாவமாக போனது.
"மாறன் பார்த்து பேசு.. ஏன்டா இப்படி பேசிட்டு இருக்க.? அவ ஏதோ வேலையா தான் வந்துருக்கா.. அவளைப் பார்த்துட்டு நான் தான் கூப்பிட்டு வெச்சு பேசுனேன்.. இதுல என்ன தப்பை நீ கண்டா.? இப்படி பேசறது உனக்கே நல்லா இருக்கா.?" என்று கடிந்தான் அதிரன்.
அப்போதும் அசராமல் "நீ அவளுக்கு வக்காலத்து வாங்கறதை முதல்ல நிறுத்து.. படிச்சு முடிச்சு மூனு மாசம் முடிய போகுது.. இன்னும் ஒரு வேலை வாங்குன மாதிரி தெரியல.. இப்படியே ஊரு சுத்திட்டு இருக்கலாம்னு நினைக்கறாளோ.?" என்று வஞ்சனையின்றி வார்த்தையை வெளியிட்டான்.
எப்போதும் இவன் இப்படித்தான். யாரின் மனநிலையையும் புரிந்துக் கொள்ள மாட்டான். அவன் தான் இவர்களைப் பார்க்கிறான் என்ற தலைகணத்தில் பேசுவான். இவனுக்குப் பயந்தே சின்ன சின்ன ஆசைகளைக் கூட துறந்து வலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்முகத்துடன் வலம் வருவாள் ஹேமா.
இப்போதும் இவனின் பேச்சுஆமனதை வலிக்கத்தான் செய்கிறது. வலித்தாலும் என்ன செய்ய.? அவனை நம்பி இருக்க வேண்டி சூழ்நிலையில் இருக்கிறாளே.? இவனை விட்டு விட்டு அவர்களின் தந்தையும் வர போவதுமில்லை. பின்பு இவள் கண்ணீர் சிந்தினாலும் அதைக் கண்டுக் கொள்வோர் தான் யார் இருக்கிறார்கள்.?
ஹேமாக்கு ஆதரவாக அதிரனே "நீ மட்டும் என்ன படிச்சு முடிச்சதுமே வேலை வாங்கிட்டீயா.? ஆறு மாசம் வேலை தேடி நாய் மாதிரி அலைஞ்சதை என்ன மறந்துட்டியா.? வேலைக் கிடைச்சதும் அங்க போகாம ஊர் சுத்தி அந்த வேலைல இருந்து உன்னைய தூக்குனதையும் மறந்துட்டு பேசறீயா.?" என்று கேட்டு அவனின் வாயை அடைத்தான்.
இதைக் கூறினால் மாறனுக்கு மறுவார்த்தை எழாது. இப்போதும் அவன் அமைதியைக் கடைப்பிடித்து நின்றிருக்க, "பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுனு சொல்லிட்டேன்.. உன்னைய நம்பி இருக்காங்கனு நீ என்ன வேணாலும் பேசலாமா.? திருப்பி இவளும் நீ பண்ணுனதை எல்லாம் கேட்டா என்ன பண்ணுவ.?" என்று அவனை விடாமல் கடிந்து "நீ வா போகலாம்.. இவன் பேசறானு நீயும் அமைதியா நின்னுட்டு" என்று ஹேமாவையும் திட்டி அழைத்துச் சென்றான்.
நகர்ந்ததும் கலங்கி இருந்த பெண்ணவளின் விழிகளைக் கண்டு இவனும் வருந்தி "அவன் தான் பேசறானு தெரியுதுல.? போடானு சொல்லிட்டு கிளம்பறதை விட்டுட்டு நீ ஏன் அழுதுட்டு அப்படியே நின்னுருக்க.? நான் வேலை வாங்கி தர்றேனு சொல்றேன்.. அதையும் வேணாம்னு சொல்ற.. அப்பறம் அவன்கிட்ட திட்டும் வாங்கிட்டு அழுகற.. என்ன தான்ம்மா உன் பிரச்சனை.?" என்று அலுத்துப் போய் கேட்டான்.
கண்ணீர் தேங்கி நின்றாலும் லேசாக விசும்பி "நானே வேலை வாங்கணும்னு நினைக்கறது தப்பா.? நீங்க சிபாரிசு பண்ணி வேலை வாங்குனா எப்பவாவது அதைய சொல்லிக் காட்டுனா..? அதான் வேணாம்.. நீங்க உரிமையா வாங்கி தந்தா நான் ஏன் வேணாம்னு சொல்ல போறேன்.? நீங்க எந்த உரிமைல எனக்கு வேலை வாங்கித் தர்றேனு சொல்றீங்க.?" என்று வினவினாள்.
அவளின் பேச்சில் இவனுக்கு தான் சிரிப்பு பீறிட்டது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் "நீயாச்சு உன் அண்ணனாச்சு.. ஆளை விடுங்க.. நான் எந்த உரிமைலயும் உனக்கு வேலை வாங்கித் தரலம்மா.. அவன் திட்டுனா நீயும் வாங்கிட்டு இந்த கொள்கையை விடாம கைல பிடிச்சுட்டு சுத்து.. இனி நான் ஏன்னு கேட்கவே மாட்டேன்" என்று அப்பேச்சில் இருந்து தப்பித்தான்.
"உன்னைய முதல்ல வீட்டுல விட்டுட்டு நான் போறேன்.. நீங்க வாங்கம்மா" என்றழைக்க, அவளோ "தேவையில்லை.. நானே போய்க்குவேன்.. நீங்க கிளம்பலாம்" என்றாள் வீம்புடன்.
"ப்ச் வாங்கனு சொல்றேன்ல.?" என்றே அவளை அதட்டி உருட்டி அழைத்துச் சென்றான். வாசலிலே ஹேமாவின் தந்தையான மகேந்திரன் மகளை இன்னும் காணோம் என்று தவிப்புடன் அமர்ந்திருக்க, அதிரனுடன் வந்து இறங்கியவளைப் பார்த்து நிம்மதியுற்றாலும் ஏன் இவனுடன் வருகிறாள்.? என்று பயந்தும் போனார்.
அதை அவரால் வாய்விட்டும் கேட்க முடியவில்லை. வார்த்தைகள் வந்தால் தானே கேட்க இயலும்.? இளமையில் நான் தான் பெரியவன்.. நான் ஏன் மற்றவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று ஆடியதன் விளைவு பக்கவாதம் வந்து கைகால்களை அசைக்க முடியாமல் கிடந்தார்.
விடாத சிகிச்சையின் பலன் இப்போது தான் மெதுவாக நடக்கத் தொடங்கி இருக்கிறார். ஆனால் பேச்சு திக்கி திணறி தான் வருகிறது. சைகையில் தான் மகளுடன் பேசுவார். மகனுடன் அதுவும் இல்லை. மாறன் இவருடன் பேசுவதை நிறுத்தி பல வருடங்கள் கடந்து விட்டிருந்தது.
இவரின் முதல் தாரத்தின் மகன் தான் மாறன். அவர் உயிருடன் இருக்கும் போதே ஹேமாவின் அன்னையைத் திருமணம் செய்துக் கொண்டு வந்து மகன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் மறந்து இவர் அடித்த லூட்டிகள் சொல்லிமாயாது. அதில் அவரின் மேல் மாறன் கொண்ட வெறுப்பு தான் இப்போது வர தொடர்கிறது.
மாறனின் அன்னை அவரின் சாவகாசமே வேணாம் என்று மகனை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்டார். அதன் பின்பு ஹேமாவின் அன்னை இயற்கை எய்திட, பச்சிளம்குழந்தையாக இருந்த ஹேமாவை வெறுக்கும் எண்ணம் வராமல் தன் மகளாகவே பாவித்து வளர்த்தார்.
ஒரு நேரம் மாறன் ஹேமாவின் மேல் பாசமாக இருப்பான். மற்றொரு நேரம் கடித்து குதறுவான்.. அவனின் மனநிலை எப்போது எப்படி மாறும் என்று யாராலும் கணிக்க முடியாமல் போயிற்று.
மாறனின் அன்னையும் இயற்கை எய்திட, அதன் பின்பு தான் மகேந்திரனுக்கு பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்தார். குடும்ப பொறுப்பு அனைத்தும் மாறனின் தலையில். தன் அன்னைக்கு துரோகம் செய்தவரை நான் ஏன் பார்க்க வேண்டும்.? என்ற எண்ணம் அவ்வப்போது எழும்.
அப்போதெல்லாம் பாராபட்சம் பார்க்காமல் அவரை வார்த்தைகளால் சாகடித்து விடுவான். தன் அன்னையின் வாழ்க்கையை பறிக்க வந்தவர் என்று ஹேமாவின் அன்னையின் மேல் இருந்து கோவம் அவர் சென்ற பிறகு ஹேமாவின் மேல் திரும்பியது.
ஒரு நேரம் அவர் செய்த தவறிற்கு இவள் என்ன செய்வாள் என்று நினைப்பான். இன்னொரு நேரம் இவளை நான் ஏன் பார்க்க வேண்டும்.? இவளின் அன்னையால் தான் நாங்கள் கஷ்டப்பட்டோம் என்ற எண்ணத்தில் தகாத வார்த்தையில் சாடவும் செய்வான்.
ஹேமாவிற்கு இது பழகிய ஒன்று தான். என்ன தான் அவன் இவளைச் சாடினாலும் அவளுக்குத் தேவையான அனைத்தையும் அவள் கேட்கும் முன்பே செய்து விடுவான். அதிலே அவனின் அன்னையின் வளர்ப்பு என்னவென்று புரிந்துக் கொள்ள முடியும்.
மகளைப் பார்த்து ஏதாவது பிரச்சினையாப்பா.? என்று சைகையில் வினவிட, அவளோ குஷியாக "அதெல்லாம் இல்லப்பா.. நம்ம மாறன் அண்ணாக்கு சீக்கிரம் டும்டும் தான்.. அண்ணாவை ஒரு பொண்ணு லவ் பண்ணுதாமா.. அதுவும் அவங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்தே அண்ணாகிட்ட பேசிருக்காங்க.. சீக்கிரம் அவங்க வீட்டுக்குப் போறோம்..
நம்மளே பொண்ணு கேட்கறோம்.. அண்ணாவைக் கல்யாண கோலத்தில் பார்க்கறோம்" என்று கூறி கற்பனைக் கோட்டை கட்டி நின்ற மகளை மகேந்திரன்
தான் விசித்திரமான பார்வையில் நோக்கினார்.
தொடரும்..

Author: AArani
Article Title: பாவை - 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.