பாவை - 4
"ஏய் என்ன புள்ள பேசிட்டு இருக்க.? நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியல" என்று மகேந்திரன் திக்கி திணறி கேட்டிட, "ப்ச் ஹேமா கம்முனு இரு.. இது உன் அண்ணனுக்குத் தெரிஞ்சா சாமியாடிருவான்.. அந்த புள்ள மூஞ்சியைப் பார்த்தா அப்படி எதுவும் எனக்குத் தெரியல" என்று அப்பேச்சைத் தவிர்க்க பார்த்தான்.
இவர்கள் ஏதாவது பேசினால் மாறன் இவனைத் தான் கும்மியெடுப்பான். 'உன்னை யார் இதைய எல்லாம் இவர்களிடம் சொல்ல சொன்னது என்று.?'
அந்த பயத்தில் அவன் இந்த பேச்சை இதோடு முடிக்கப் பார்க்க, ஹேமாவின் முகம் சட்டென்று விழுந்து விட்டது.
"இங்க பாரு அந்த பொண்ணு உண்மையாவே அப்படிச் சொல்லுச்சா.? இல்லையானு தெரியல.. அடுத்து என்ன பண்றதுனு மாறன் தான் முடிவு பண்ணனும்.. நம்ம ஏதாவது பண்ணுனா அவன் கோவம் இன்னும் அதிகமாகிரும்.. அதனால நீ உன் வேலையை மட்டும் பாரு.. என்ன புரியுதா.?" என்று அதட்டிக் கூறினான்.
இவனின் வார்த்தையும் உண்மை என்பதால் சரியென்று தலையாட்டுவதைத் தவிர பெண்ணவளுக்கு வேறு வழியில்லை.
ஹேமாவை விட்டு விட்டு அதிரன் கிளம்பினான். மாறனைத் தேடி செல்ல, அவனோ இவ்வழக்கிற்குக் காரணமான மீனவக்குப்பத்திற்குச் சென்றிருப்பதாக தகவல் வந்தது. இவனும் அங்கு விரைந்தான்.
மீனவக்குப்பம் என்ற பெயரையே தாங்கிய ஊர் அது. கடலோரத்தில் உள்ள இடமும் கூட. மாறன் சென்ற போது பலவகையான மீன்களின் வாசமே அவனை வரவேற்க, தன்னுடன் வந்த தன் டிரைவரை வண்டியின் அருகிலே நிற்க வைத்து விட்டு இவன் மட்டும் குப்பத்திற்குச் சென்றான்.
இவனைப் பார்த்ததும் இளைஞர்கள் சுற்றி வளைக்க, "சாரே உங்களைய பார்த்ததுல சந்தோசம்.. உங்களுக்கு என்ன உதவி வேணுனாலும் நாங்க பண்றோம்" என்று இளைஞர் பட்டாளங்கள் ஒன்று போலவே கூறியது.
இதழில் புன்னகையை உதித்து "ஏதாவது தேவைனா நானே சொல்றேன்.. இப்ப நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க.." என்றவனின் பார்வை கூட்டத்தில் அமைதியாக அதே சமயம் அவஸ்தையுடன் நின்ற ஒருவனின் மேல் விழுந்தது.
அவனின் முகச்சுருக்கலிலே ஏதோ விடயம் உள்ளது.. ஆனால் அதை அவன் கூற முடியாமல் தவிக்கிறான் என்பதை ஊகித்துக் கொண்ட மாறன் "என்கூட ஒருத்தர் மட்டும் வாங்க.." என்றதும் "நான் வர்றேன் சார்... எனக்கு இங்க எல்லாமும் அத்துப்படி" என்று ஒருவன் முன்னால் வந்தான்.
ஆனால் அவனை மறுத்து விட்டு தன்னையே பார்த்து நின்றவனைக் கைகாட்டி அழைத்து "நான் இவனையே கூட்டிட்டு போறேன்.. நீங்க எல்லாரும் உங்க வேலையைப் பாருங்க" என்றிட, அந்த இளைஞனின் முகத்தில் பிரகாசத்தின் சாயல் மின்னி மறைந்ததை மாறனும் கண்டான்.
முன்னால் வந்த இளைஞன் "அவன் எதுக்கு சாரே.? அவனுக்கு எதுவும் தெரியாது.. நானே வர்றேன்" என்று மறுக்கப் பார்க்க, "இருக்கட்டும்பா.. எனக்கு எல்லாமும் தெரிஞ்சவனை விட எதுவும் தெரியாதவன் கூட வர்றது தான் பிடிக்கும்.. அப்ப தான் நானும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியும்" என்று அவனுக்குச் சந்தேகம் வராதபடி மறுத்தான்.
எல்லாரும் களைந்துச் சென்றதும் இவர்கள் இருவரும் மட்டுமே நடந்தனர். அந்த இளைஞனிடம் மௌனம். மாறனும் விடாமல் அவனைக் கவனித்துக் கொண்டு தான் வந்தான்.
நேராக முதலில் கடலுக்குத் தான் சென்றான். கடல் அலையில் கால்களை நனைத்து சிறிது நேரம் நின்றவன் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாததைக் கவனித்து "எப்பவும் இங்க கூட்டம் இவ்ளோதானா.? இல்ல இன்னைக்கு மட்டுமா.?"
"கொஞ்ச நாளா யாரும் அதிகமா கடலுக்கு வர்றது இல்ல சார்.."
"எப்ப இருந்து.?"
"அந்த பொண்ணுக இறந்ததுல இருந்து"
ஓஓஓஓ என்றவன் "நீ என்ன வேலை பார்க்கற.? உனக்கு இதே ஊரா.?" என்று அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள கேள்வி எழுப்பினான்.
"இங்க எல்லாரும் மீன் பிடிக்கிற வேலை செய்யறப்ப நான் மட்டும் என்ன சார் புதுசா வேலை பார்க்க போறேன்.? இதே குப்பத்துல தான் பிறந்தேன்.. இங்கயே தான் வளர்ந்தேன்.. இப்பவும் இங்கனயே தான் இருக்கேன்.. என் ஆத்தா போய் சேர்ந்துட்டா சார்.. அப்பன் மட்டும் தான் இருக்கான்.. நான் என் அம்மாச்சி கூட இருக்கேன்" என்று தன் வரலாற்றைக் கூறினான்.
"உன் பேரு என்னனு சொல்லலயே.?"
"குமரவேலன் சார்"
"ம்ம்ம்ம்ம் அப்படி உட்கார்ந்து பேசலாமா.?"
"ம்ம்ம் வாங்க சார்"
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருவரும் எதிர் எதிர் திசையில் அமர்ந்தனர். வேலனின் பார்வை சுற்றியும் நோட்டமிட்டு தங்களை யாராவது கவனிக்கிறார்களா.? என்று ஆராய்ச்சி செய்தது. இதை மாறனின் விழிகளும் கண்டுக் கொண்டது.
வேலன் கண்டுக் கொள்ளாத ஒன்றை மாறன் கண்டு விட்டான். தான் அழைத்துச் செல்வதாக முன்னால் வந்த வன் இவர்கள் அமர்ந்திருக்கும் படகிற்கு பின்னால் மறைந்திருந்தான்.
அவன் ஏதோ தவறு செய்கிறான் என்று முதலிலே அவனின் பேச்சின் மூலம் உணர்ந்திருந்த மாறன் இப்போது தாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க முயல்வதைக் கண்டு அவனின் மேல் ஏதோ ஒரு தவறு உள்ளது என்பதை உறுதி செய்தான்.
எதுவும் பேசாமல் அதிரனுக்கு அழைத்தான். அவன் வந்து விட்டதாக கூறியதும் தான் அமர்ந்திருக்கும் இடத்தின் அடையாளத்தையும் அவன் கூறி வேறு ஏதோ ஒன்றையும் குறுஞ்செய்தியின் வாயிலாக அவனிடம் சேர்பித்தான்.
'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்ற அதிரனும் வேகமாக அவ்விடத்தை அடைந்தான். மறைந்து அமர்ந்திருந்தவனை ஏதேச்சையாக பார்ப்பதைப் போல் பார்த்து "ஹலோ தம்பி இங்க வாங்க.." என்று சத்தமாக அழைத்தான். அதில் அந்த இளைஞன் திடுக்கிட்டு 'ஷ்ஷ்ஷ்ஷ் போ அந்த பக்கம்.. சத்தம் போடாத' என்று சைகையில் கூறினான்.
அது அவனுக்குப் புரிந்தாலும் புரியாதது போலவே "ஓஓ நான் அங்க வர்றதா.? இருங்க வர்றேன்" என்று அவனை நோக்கி வர, 'அய்யோ காரியம் கெட்டுப் போகும் போல.?' என்று அச்சமடைந்தவனின் முகத்தில் பீதி படர்ந்தது.
"தம்பி இங்க ஒரு போலீஸ்காரர் வந்தாருல.? அவரு எங்கேனு பார்த்தீங்களா.?" என்று சத்தமாக அதே சமயம் மாறனையும் அவனின் விழிகள் அப்போது தான் பார்த்தது போல் "அட அங்க இருக்காங்க பாரு.. சாரி தம்பி.. நான் சரியா கவனிக்கல" என்றவன் "ஹலோ மாறன் சார்.. மாறன் சார்.. இங்க பாருங்க" என்று அங்கு நின்றே அழைத்தான் சத்தமாக.
சாவகாசமாக திரும்பிய மாறன் "என்னடா.?" என்று கேட்க, "சார் உங்களைய எங்க எல்லாம் தேடறது.? உங்களைய காணாம இந்த தம்பிகிட்ட கேட்டுட்டு இருந்தேன்.." என்று மறைந்து நின்ற அந்த இளைஞனையும் முன்னால் இழுத்து அவனிடம் காட்டினான்.
வெலவெலத்துப் போய் விட்டான் அவன். கண்ணைச் சுருக்கி 'நீயா.?' என்பதைப் போல் பார்த்த மாறனின் பார்வையில் அரண்டவன் "சார் இந்த பாகம் வேலையா வந்தேன்.." என்று பதறிக் கூறினான்.
"சரி வந்தது தான் வந்த.. போய் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வா" என்ற இவனின் வார்த்தையை ஏற்றது போல் வேகமாக வன் செல்ல, "அவன் யாரு.?" என்று வேலனிடமும் கேட்டான்.
"காசி சார்.. இந்த குப்பத்துலயே அவன் வூடு தான் வசதியானது.. அவன் அப்பன் இருந்த வரைக்கும் எல்லாருக்கும் அள்ளி அள்ளிக் குடுப்பான்.. ஆனா அவன் போனதுல இருந்து இவன் பண்றது எதுவும் சரியில்ல சார்" என்று நிறுத்தியவன் "இறந்த மூனு பொண்ணுகள்ல இவனோட தங்கச்சியு
ம் ஒருத்தி சார்" என்று கூறி அதிர்ச்சியை அளித்தான் வேலன்.
தொடரும்..

Author: AArani
Article Title: பாவை - 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.