• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நெஞ்சம்- நிறைவு பகுதி

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
46

நெஞ்சம்- நிறைவு பகுதி


ரஜினீஷ், தான் யாரெனச் சொன்ன நாளில், அதன் பின் பானு கணவன் மற்றும் மாலதி குடும்பத்தால் பல சச்சரவுகள் வந்தது.

சந்துரு, “ யாருக்காகவும், சாருவையோ, சரயுவையோ, ரஜ்ஜுவையோ நான் விட்டுக் கொடுக்க தயாரா இல்லை. உங்களுக்கு பிடிக்கலையா, எங்களை உங்க வாழ்க்கையிலிருந்து தள்ளி வச்சிடுங்க. எங்களை நேசிக்கிறவங்க மட்டும் போதும்” என்று விட, தயாளனும், சந்திராவும் சபாஷு என்றனர்.
ரஜினீஷ், ராஜாத்தியிடம் வந்து, தன் மாமாவின் டைரி குறிப்புகளை மேலோட்டமாக சொல்லி, தன் குடும்பம் அனுபவித்த தண்டனைகளையும் சொல்லி, இரண்டு பிள்ளைகளையும் பறி கொடுத்த, தாத்தா திரீமேனியப்பனை காண வரச் சொல்லி வேண்டுகோள் விடுக்க, சந்துருவும், “ வாங்கம்மா, யோயிட்டு வருவோம்” என அழைக்க, பேத்தியின் நல் வாழ்வைக் கருத்தில் கொண்டு பகை முடிக்கச் சென்றார்.

திருமேனி, “ என் வம்சம், பேத்தியாளை காப்பாத்தி கொடுத்ததுக்கு நன்றி” என கும்பிட, கொஞ்சம், நஞ்சம் காலம் சென்ற மருமகன் மீதிருந்த வெறுப்பையும் கரைத்து விட்டு வந்தார்.

பேராசிரியர் சாகேத் ராமின் வீட்டில் இனி சாரு வசிக்க இயலாது என்ற நிலையில், ரஜினீஷ் அதை யமுனாவிடம் ஒப்படைத்தான்.

அவன் தொழில் சென்னையில் இருக்க, சந்துருவும், அவனுமாகச் சேர்ந்து மற்றொரு பெரிய வீட்டை வாங்கி சந்திர பவனம் என பெயரிட்டனர். அதே போல் சந்துருவின் அனுபவத்தை வீணாக்க விரும்பாமல், தனது கம்பெனி அக்கவுண்ட்களை கையாளும் நிர்வாக பொறுப்பைக் கொடுத்தான்.

அடுத்து வந்த முகூர்த்தில் மீனாட்சி அம்மன் கோவில் வைத்து, அப்பத்தா மீனாட்சியின் மானசீகமான ஆசியோடு, சாரு கழுத்தில் சந்துரு பொன் தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றில் மூன்று முடியைப் போட, தலை குனிந்து ஆனந்தக் கண்ணீரோடு வாங்கிக் கொண்டாள். பதின்ம வயதிலிருந்து கண்ட கனவு நினைவாகி இருந்தது. இருவருமே உணர்ச்சி வயப் பட்ட நிலையில் இருக்க, தாலி கட்டிய கையோடு , குங்குமம் வைத்து விட்டு உச்சி முகர்ந்து சந்துரு அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அவன் நெஞ்சில் முத்தமிட்டு சந்துருவைத் தன்னவன் ஆக்கிக் கொண்டாள்.

சென்னை புது வீட்டில் திருமதி சந்துருவாக சாருமதி குடி புகுந்தாள்.

ஆவணியில் வந்த வளர்பிறை முகூர்த்தத்தில் மணமகன் பெற்றோராக சந்துரு, சாருவும், மணமகள் பெற்றோராகச் சந்திரா, தயாளனும் நின்று முறை செய்ய,தாத்தா திருமேனி, அம்மாச்சி ராஜாத்தி முன்னிலையில் மேலிருந்து இரு பெற்றோரும் வாழ்த்த ரஜினீஷ் ராம், சரயுவை மணமுடித்தான்.

சந்திர பவனத்தில் கொஞ்சி திரியும், காதல் பறவைகளாக இளைய ஜோடிகளை விட, இளமை திரும்பிய ஜோடிகளே இனித்துத் திரிந்தனர் .



“வாலிபத்தின் எல்லையில்

வாசல் வந்து முல்லையே

போகும் வரை போகலாம்


என்ன பிழையே?

சாருவைச் சுற்றி வந்து சந்துரு பாட,

“ பிள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி குதிச்சானாம் போங்க” எனத் திட்ட.

“ யாரைடி கிழவன்னு சொன்ன”

தலைவர் ஸ்டைலில் சொல்லி, சந்துரு சாருவை லிப் லாக் அடிக்க,

“ மாமா. நான் ஒன்னும் பார்க்கலை” சரயு கண்ணை மூட,

“அட போமா” அசட்டு சிரிப்போட செல்ல,

கண் மூடி இருந்தவளைக் கடத்தியிருந்தான் ரஜினீஷ்.

எல்லோருக்கும் எல்லா பாக்கியமும் கிடைப்பதில்லை. கிடைப்பதை இட்டு நிரப்பிக்கொண்டு வாழக்கையை மகிழ்ச்சியாய் வாழ வேண்டியது தான்

துள்ளி குதிக்குது நெஞ்சம்.

முற்றியது.

கதை தறியில், என் கதையையும் நெய்ய வாய்ப்பு தந்த, சுதா, சுதா சிஸ்டர்கள் இருவருக்கும் நன்றி.
 

Author: Kasavu
Article Title: நெஞ்சம்- நிறைவு பகுதி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

EswariSasi

New member
Joined
Jun 3, 2025
Messages
17
Wow 🥰🥰🥰🥰 lovely story 😍 👏 😍 👏 short and sweet story 💓 💓 💓 💓 Niraivaana mudivu 💞 💞 💞 💞 😘 🎉 🎉 🎊 💐 vazhthukkal ma 🎉
 

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
46
Wow 🥰🥰🥰🥰 lovely story 😍 👏 😍 👏 short and sweet story 💓 💓 💓 💓 Niraivaana mudivu 💞 💞 💞 💞 😘 🎉 🎉 🎊 💐 vazhthukkal ma 🎉
thankyou very much for lovely comment.
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன.....

வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே....
சந்துரு ❤️ சாரு.....

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்ணே உன்னால்
கண்டேன் என்னை...
கண்ணை மூடி
காதல் கொண்டேன்...

காலம் எல்லாம்
கானல் நீராக
காத்திருந்தேன் தனியாக
குடும்பம் வேண்டி.....

காத்திருந்த பலன்_ உனை
கை பிடித்த நேரம்
காலம் எல்லாம் சொர்க்கம்.... ❤️
ரஜினிஷ் ❤️ சரயு....


அருமை மா....
முன்னாள் காதலும் இந்நாள் காதலும்
முடிந்தது என பிரிந்த குடும்பமும்
ஒன்றாய் இணைத்து துள்ளி குதிக்க வைத்து விட்டீர்கள் நெஞ்சத்தை..... அற்புதம்👏🏻👏🏻👏🏻💐💐🤩🤩❤️😘
 

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
46
மிக்க நன்றி கவிக்குயில்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் சாராம்சத்தையும் கவிதையாய் வடித்து, சிலாகித்து நீங்கள் தந்த ஆதரவில் இருபது நாளில் ஒரு கதை முடித்துள்ளேன். மிக்க நன்றி.
உங்கள் மகிழ்வில் நானும் மகிழ்கிறேன்.
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
மிக்க நன்றி கவிக்குயில்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் சாராம்சத்தையும் கவிதையாய் வடித்து, சிலாகித்து நீங்கள் தந்த ஆதரவில் இருபது நாளில் ஒரு கதை முடித்துள்ளேன். மிக்க நன்றி.
உங்கள் மகிழ்வில் நானும் மகிழ்கிறேன்.
நன்றி மா ❤️💐👏🏻🤩😘 முகநூலில் கதைக்கு விமர்சனம் பதிவு செய்து உள்ளேன்....மா... 🤩❤️😘
 
Last edited:
Top Bottom