• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -13

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
308
அத்தியாயம் 13

மாலை மயங்கிய பொழுது. தேநீர் டம்ளரைக் கணவனிடம் தந்தார் சித்ரா. வாங்கி ஒரு மிடறு அருந்திய சேது‍, "உனக்குமா?"
"இல்லங்க, நான் அப்புறம் குடிச்சிக்கிறேன்."
"ம்ம்.." என்றவரின் சிந்தனை எங்கோ ஊர்வலம் செல்ல, துணைவரின் முகத்தையே பார்த்திருந்தார் இல்லத்தின் தலைவி.
"என்னங்க."
"சொல்லுமா."
"என்ன யோசனை.?"
"வேற என்ன? நம்ம பையனைப் பத்திதான்‌."
"பேசுனீங்களா.?"
"இல்ல, சித்திக்கிட்டப் பேசுனேன்‌."
"எப்படி இருக்கானாம்?"
"நல்லா இருக்கிறதா தான் சொன்னாங்க."
"நிலாவைப் பத்தி.?"
"பேசக் கூடாதுனு சொல்லி தான‌ அனுப்பினேன். இதுவரைக்கும் பேசின மாதிரி தெரியல."
"நாம ஒரு தடவைப் போய் பார்த்துட்டு வருவோமாங்க.?"
"என்னம்மா, பையனை விட்டு இருக்க முடியலயா?"
"இவ்வளவு நாள் எல்லாம் இருந்தது இல்லேல? காலேஜ் டூர், ஆஃபிஸ் மீட்டிங்னு போனாக்கூட ஒரு வாரத்துல திரும்பி வந்துடுவான்.‍? இப்ப ஒன்னரை மாசம் ஆச்சு."
"சரி போகலாம்!" என அவர் உரைக்கும் பொழுதே கைப்பேசி ஒலித்தது.
திரையில் பெயரைக் கண்டவர், "நூறு ஆயிசு உன்னோட மகனுக்கு!" என்றுவிட்டு, தொடர்பை இணைத்தார்.
"கிருபா.?"
"ஹாய் டாட். ஹவ் ஆர் யூ?"
"ஐம் ஃபைன் மை பாய். நீ எப்படி இருக்க.?"
"சூப்பர்ப்."
"ஹேப்பிடா. உன்னோட குரலை இந்த டோன்ல கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு.!"
அவன் மறுபுறம் சிரிக்க, "என்ன கால் பண்ணி இருக்க.?"
"என்ன டாட், டேரெக்டா விஷயத்துக்கு வந்துட்டீங்க?"
"நான் சொன்னதை மீறி நீ கால் பண்ணி இருக்க. சோ, முக்கியமான காரணம் ஏதாவது இருக்கணும்."
"எஸ் டாட்‌‌. பட், அப்புறம் பேசலாம். அம்மா எங்க.?"
"இதோ!‌" என்று கைப்பேசியை ஒலிபெருக்கிக்கு மாற்றினார் சேது.
"மிஸ் யூ மாம்."
"நானும் தான் கிருபா. எப்படி இருக்க? நல்லா சாப்பிடுறியா? உடம்பு ஓகேவா? இல்ல, மெலிஞ்சிட்டியா.?"
"மாம், ஐம் நாட் எ கிட். எந்தக் குறையும் இல்லாம நல்லா இருக்கேன். பாட்டி நல்லா பார்த்துக்கிறாங்க. தினமும் புதுசா வெரைட்டியான சாப்பாடு. அனேகமா டூ கேஜி கூடி இருப்பேன்னு நினைக்கிறேன். உங்கக்கூட இல்ல, பார்க்க முடியல, நினைச்சதும் பேச முடியலங்கிறதைத் தவிர எதுலயும் குறையில்ல எனக்கு."
"ம்ம். உடம்பைப் பார்த்துக்கோ."
"எஸ் மாம்."
"சரி சொல்லு, என்ன விஷயம்.?"
"ரெண்டு பேரும் சேர்ந்து தான இருக்கீங்க?"
"ம்ம்.."
"டாட், மதுரையில பிராப்பர்ட்டி எதுவும் வாங்குற ஐடியா இருக்கா?"
"ஏன்டா.?"
"சொல்லுங்க டாட். பாட்டி இங்கதான இருக்காங்க‌. உங்களுக்குச் சொந்த ஊரும் இதுதான். கடைசி காலத்துல ஊர்ல வந்து செட்டில் ஆகணும்னு, பொதுவா ஒரு பேச்சுப் போகுமே? அந்த மாதிரி எனி ஐடியா.?"
"எங்களைக் கூட வச்சுப் பார்த்துக்காம, துரத்தி விடலாம்னு நினைக்கிறியா மகனே? அதுக்குத்தான் இப்பவே பிளான் பண்ணுறியா.?"
"டாட்.?"
"பின்ன என்னடா? திடீர்னு இந்த மாதிரி கேட்டா, இப்படித்தான் நினைக்கத் தோணும்."
"ஒரு பில்டிங் சேலுக்கு இருக்கு. ஃபிஃப்டி ஃபைவ் லாக்ஸ். கீழ இன்ஸ்டிடியூட் ஒன்னு ரன் ஆகுது. மேல வீடு. பாட்டி வீட்டுப் பக்கத்துலயே மார்க்கெட்டுக்குள்ள."
"ஏன் உனக்குப் பிடிச்சிருக்கா அந்த இடம். வாங்கணுமா?"
"நான் நேர்ல பார்த்தது இல்ல டாட். எனக்கு ஒருத்தர் சொன்னாங்க."
"நீ காரணம் இல்லாம எதுவும் செய்ய மாட்டியே?"
"அது விஷயம் இல்ல. உங்க ஒப்பீனியனைச் சொல்லுங்க."
"பதினஞ்சு வயசு இருக்கும் போதே உன்னோட தாத்தா, இங்கக் கூட்டிட்டு வந்துட்டாரு. மதுரைக்கும் எனக்கும் இருக்குற ஒரே உறவு, வல்லி சித்தி மட்டும்தான். எதுவும் தேவைக்குனு வந்தா, அதிகபட்சம் ரெண்டு நாள் தங்குவோமா? அவங்க வீடே அதுக்குப் போதும்."
"அப்ப உங்களுக்கு இந்தப்பக்கம் வர்ற ஐடியா எதுவும் இல்லயா?"
"என்ன விசயம்னு சொல்லுடா."
"அந்த பில்டிங்கை வாங்கணும் டாட். அதான் ஏற்கனவே எனக்கு நீங்க பணம் தர்றதா சொல்லி இருந்தீங்களே?"
"அந்த பணத்துல அங்க பிராப்பர்ட்டி வாங்கப் போறியா.?" என சேது வியப்புடன் வினவ, "நான் வாங்கல. நீங்க வாங்குங்கனு சொல்றேன்."
"இது என்னடா லாஜிக்.?"
"என்னோட பணத்தை எதுக்காக வச்சிருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். டாட் ப்ளீஸ்."
'நிலாவோட நினைப்புல இருந்து இவனை வெளியே கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம் போலயே?' என மனதோடு எண்ணியவர், "நான் ஏன்டா தேவை இல்லாம அங்க வாங்கணும்? ஒருவேளை மதுரைப் பொண்ணு யாரையும் நீ கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்தா, மருமகளுக்காக வாங்கலாம். என்ன சொல்லுற கிருபா?"
"மிஸ்டர் சேது.. இது ஓவர், பார்த்துக்கோங்க!"
அவர் சிரித்து, "நீ விசயத்தைச் சொல்லவே மாட்டிற பார்த்தியா?"
"வீடியோ காலுக்கு வாங்க டாட்!" என இணைப்பைத் துண்டித்தவன், அடுத்த நிமிடத்தில் பெற்றோரை கைப்பேசித் திரையில் பார்த்தான்.
மகனின் நிழல் உருவைக் கண்ட சித்ராவின் விழிகளில் நீர் நிறைந்து விட்டது‌‌. எதிரே இருந்த திரையை கை விரல்களால் தொட்டுப் பார்த்தார்.
"வெயிட் கூடி இருப்பேன்னு சொன்ன? ஆனா, பார்த்தா அப்படித் தெரியலயே கிருபா.?" எனத் தாயானவர் வினவிட, தனது வலது கரத்தைக் காட்டினான்.
வெட்டுப்பட்ட காயம் குணமான போதும், அதன் தடம் அப்படியே இருந்தது. இருவரும் பதறிப் போயினர்.
சேது குரலில் பதற்றத்துடன், "கிருபா‌, டேய்! என்ன ஆச்சு.?"
"சின்ன ஆக்ஸிடெண்ட் டாட். வந்த மறுநாளே விரல் கட் ஆகிடுச்சு."
சித்ரா தவிப்புடன், "ஏன்டா எங்கக்கிட்ட சொல்லல.?"
"இப்படி எமோஷனல் ஆகிடுவீங்கனு தான் சொல்லல‌. நவ், ஐம் ஃபைன் ம்மா!" என்று நடந்த நிகழ்வை உரைத்தான்.
"இப்ப வரைக்கும் மதுதான் என்னை டே அண்ட் நைட் கவனிச்சிக்கிறாங்க‌. எப்படி அவங்களுக்கு என்ன ரீபே பண்ணுறதுனு தெரியல. அந்த இன்ஸ்டிடியூட்டை ரன் பண்ணுறது கிருஷ்ணன் அங்கிள். சோ.." என, மற்ற விபரங்களையும் பகிர்ந்தான்.
"அதுக்காக இவ்வளவு தூரம் செய்யணுமா கிருபா?" என்று வினவிய சேதுவின் குரலில் என்ன இருந்தது என்று அவனால் இனம் காண முடியவில்லை.
"எனக்குத் தோணிடுச்சு டேட். நாம வாங்கிட்டா அவங்க இடம் மாத்த வேண்டியது இல்லேல?"
"அதான்டா கேட்கிறேன். அப்படி என்ன அவசியம்? செஞ்ச உதவிக்குத் தேங்க்ஸ் சொன்னா போதாதா? கைமாறா வேற எதையும் எதிர்பார்க்கிற ஆளுங்களும் இல்ல, அவங்க. உன்னோட திருப்திக்காக, வேற ஏதாவது உதவி செய்யலாம். அதை விட்டுட்டு ஃபிஃப்டி ஃபைவ் லாக்ஸ்? சின்ன அமௌண்ட் இல்ல கிருபா!"
"இங்க பணம் எவ்வளவுங்கிறது விஷயம் இல்லப்பா. மனுசங்களோட சந்தோஷம்‌ பெருசு இல்லயா?"
"மத்தவங்களைப் பத்தி எப்ப இருந்துடா இவ்வளவு தூரத்துக்கு யோசிக்க ஆரம்பிச்ச.?"
"ஏன், இவ்வளவு நாளும் செல்ஃபிஷா இருந்தேனா.?"
"அப்படிச் சொல்லல. ஆனா, இது ரொம்ப தாராள மனசா இல்ல இருக்கு.?"
மெலிதாய்ச் சிரித்தவன், "உங்களுக்கு ஓகேனா வாங்கலாம். இல்லனா பரவாயில்ல. மிஸ் மதுவோட ஆசை, ஏதாவது ஒரு வகையில நிறைவேறும்னு நம்புறேன்."
சேது எதுவும் பேசாது புன்னகைக்க, மகனைப் பார்வையால் வருடினார் சித்ரா.
"பாய் டாட். சீ யூ மாம்!" என்று இணைப்பைத் துண்டித்திட, பெற்றோரின் முகத்தில் இனம் புரியாத ஒருவித மலர்ச்சி‌.
நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து பணி செய்ததால் வலித்த கழுத்தின் பின்பக்கத்தில் தேய்ந்துக் கொண்டு, சாய்ந்து உட்கார்ந்தான் கிருபா.
ஏனோ மனம் இந்நொடியில் எவ்வித பாரமும் அழுத்தமும் இன்றி, லேசாய் இருப்பது போல் தோன்றியது அவனிற்கு.
'இந்த கழுத்து வலி மட்டும் இல்லேனா, உலகத்துலயே இந்த செகண்ட்ல ஹேப்பியஸ்ட் பர்சன் நான்தான்!' என்ற எண்ணம் தோன்றிட, தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான்.
'மகிழ்ச்சி என்பது எத்தனை எளிதில் கிட்டி விடுகிறது!' என வியப்பாய் இருந்தது. இந்த உணர்தல் எல்லாம் மதுரைக்கு வந்த பின்புதான்.
மது மற்றும் வல்லியுடனான எண்ண பரிமாற்றங்கள், அவனது பார்வைக் கோணத்தையே வேறு விதமாய் மாற்றி இருந்தது.‌
ஒரு நீண்ட மூச்சை வெளி விட்டு இருக்கையில் இருந்து எழுந்த நொடி, "மிஸ்டர் கிருபா, இந்தாங்க பருத்திப் பால்!" எனக் கையில் செம்புடன் ஓடி வந்தாள் பாவை‌.
அனிச்சையாய் அவனது முகம் மலர்ந்திட, "பாட்டி, நீங்க செண்டருக்குப் போய் இருக்கிறதா சொன்னாங்க.‌ அதுக்குள்ள இதை எங்க வாங்கினீங்க.?"
"கிளாஸுக்கு வந்த ஒரு பொண்ணு, வர்ற வழியில பருத்திப்பால் வித்திட்டு இருக்கிறதா சொன்னா. அதான் ஓடிப் போய் வாங்கிட்டு வந்துட்டேன்."
"மிஸ் மது, உங்களுக்கு என்ன வயசாகுது? இது என்ன, சின்ன பிள்ள மாதிரி?"
"எவ்வளவு வயசானா என்ன? நம்மளோட பிடித்தமும், அது நமக்குக் கொடுக்கிற சந்தோஷமும் மாறிடுமா? எனக்குப் பருத்திப்பால் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு எப்படினு தெரியல. டேஸ்ட் பண்ண கொடுக்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். வெயிட், ஸ்பூன் எடுத்துட்டு வர்றேன்!" என்று அவள் உள்ளே செல்ல,
"வந்துட்டியா? கொஞ்ச நேரமாவது ஒரு இடத்துல ஒழுங்கா இருக்கியா? எங்க‌ எங்கதான் ஓடுவியோ?" என இளையவளைக் கண்டித்தபடியே சமையல் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தார் சுந்தரவல்லி‌.
"அசையாம இருந்தா, உயிரு இல்லனு முடிவு கட்டிடுவாங்க அம்மாச்சி. அதுனால எப்பவும் ஏதாவது ஒன்னு செஞ்சுக்கிட்டே இருக்கணும்."
"பேச்சைப் பாரு! சக்கரத்தைக் கட்டுன மாதிரி இவளுக்கு மட்டும் எங்க இருந்துதான் இவ்வளவு தெம்பு கிடைக்கிதோ தெரியல."
"எல்லாம் நீங்க ஊட்டி ஊட்டி வளர்த்ததுல இருந்து கிடைக்கிறது தான்!"
"நல்லா வக்கனையா பேசு!"
மீதியை அப்புறம் பேசிக்கலாம், "இந்தாங்க கிருபா, எப்படி இருக்குனு சொல்லுங்க!" என்று கிண்ணம் ஒன்றில் பருத்திப் பாலை ஊற்றி சிறிய அளவிலான கரண்டியையும் போட்டுக் கொடுத்தாள்.
ஆவி பறந்தது. அவ்வளவு சூடு!
'இதனை எப்படிக் கையில் பிடித்துத் தூக்கி வந்தாள்?' என வியப்பாய் இருந்தது.
சுக்கு மற்றும் மிளகின் நெடி சுவாசத்தில் கலந்து உள்ளே சென்றிட, சிறிதளவு ருசி பார்த்தான். தொண்டைக்குள் சூடாய் இறங்கி, மூக்கில் இருந்து நீர் வழிய வைத்தது.
அவனையே பார்த்திருந்தவள், "எப்படி.?"
"காரமா இருக்கு!"
"செம இல்ல.?"
"ம்ம். மூக்குல இருந்து தண்ணி வடியிது."
"அப்படியே குடிங்க. சளி ‌எல்லாம் வெளிய வந்துடும். கோல்டுக்கு இதுதான் பெஸ்ட் மெடிசின்!"
"தேங்க்ஸ் மிஸ் மது‌."
"சரி சாப்பிடுங்க. நான் செண்டருக்குக் கிளம்புறேன்! அம்மாச்சி நீங்களும் குடிங்க!" என்றுவிட்டு அவள் செல்ல, அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த இனிமையான பாடல் சட்டென்று நின்றது போலான ஓர் உணர்வு‌.
அந்த அமைதியை ஈடு கட்டும் விதமாய், கையில் இருந்த பருத்திப்பாலின் ருசியை அறிந்திட முனைந்தான் கிருபாகரன்.
 

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
மனதின் வெற்றிடத்தில்
மதுவின் செயல்
மனதை நிறைக்கிறது .... 🤩🤩🤩🤩
 
Top Bottom