அத்தியாயம் 14
நாளிதழ்களை எடை போட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், பழைய காகிதங்களை விலைக்கு வாங்குபவன்.
"அப்பத்தா, ஏழு கிலோ இருக்கு!" என்றிட, "சரி எடுத்துட்டுப் போ!" என உள்ளே இருந்தே குரல் கொடுத்தார் சுந்தரவல்லி.
"வந்து காசை வாங்கிக்கோங்க."
"அந்த காசுல தான், என் வீடு நிறைய போகுதாக்கும். பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போ!"
"இப்படியே தான் ஒவ்வொரு தடவையும் செய்யிறீங்க. எனக்குச் சங்கடமா இருக்கு அப்பத்தா."
"எத்தனை வருசமா உன்கிட்ட பேப்பர் போடுறேன். நான் எப்படினு தெரிஞ்சிருந்தும் காசு தர்றேங்கிற பார்த்தியா.? தேர்முட்டிப் பக்கம் போறப்ப, கஸ்தூரி மஞ்சள் வாங்கிட்டு வந்து கொடு. என்ன?"
"சரி அப்பத்தா!" என்றவன் எடை போட்ட காகிதங்களைச் சாக்குப் பையில் போட்டுக் கட்டிட, "பாட்டி, இந்தப்பக்கம் இன்னும் நியூஸ் பேப்பர் இருக்கே.?" என அலமாரியின் இரண்டு அடுக்குகளை நிறைத்து இருந்தவைகளைக் காட்டினான் கிருபா.
"அப்பாத்தா அதை என்னைக்கும் எடைக்குப் போட மாட்டாங்க!" எனக் காகிதக் காரன் உரைத்திட, கேள்வியாய்ப் பார்த்தான்.
வெளியே எட்டிப் பார்த்தவர், "அது, நான் சேர்த்து வச்சிருக்கிறது கண்ணா!" என்றிட, "ஏன்யா, எந்த உறவும் இல்லாத நாங்க எல்லாம் பெரியவங்களை அப்பத்தா, அம்மாச்சினு உறவோட கூப்பிட்டா, சொந்த பேரன் நீங்க யாரோ மாதிரி பாட்டினு சொல்றீங்க?" என வினவினான், எடை வாங்குபவன்.
"என்ன உறவு, எப்படிக் கூப்பிடணும்னு யாரும் சொல்லித் தரல. ஸ்கூல் புக்ல பாட்டினு படிச்சதை வச்சுக் கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். வீட்டுலயும் அதை மாத்தச் சொல்லாததால, எனக்கு அப்படியே பழகிடுச்சு."
"நல்லா பழகினீங்க போங்க!" என்றவன் காகித பையோடுக் கிளம்ப, அலமாரியில் இருந்த செய்தித் தாள்களில் ஒன்றை உருவி எடுத்தான் கிருபா.
உள்ளூர் செய்திகளைத் தாங்கி இருந்த நான்கு பக்க இரட்டை காகிதம் அது. குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு, பெரிதாய் எதுவும் இல்லை.
மற்றொரு காகிதத்தை எடுத்தான். வேறொரு தேதி. அன்றைய செய்திகளைத் தவிர சிறப்பாய் வேறெதுவும் பார்வையில் படவில்லை.
மூன்றாவதாய் ஒன்றை எடுத்தான். அதுவும் அப்படியே!
ஆனால் அம்மூன்றிற்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. நான்காம் பக்கத்தின் மேல் பக்க ஓரத்தில் ஒருபக்க கதை போன்ற பகுதியைப் பிரித்திருந்தனர்.
மூன்றிலுமே ஒரே தலைப்பு, அறம் பொருள் இன்பம். நா. 24 எனக் குறிப்பிட்டு ஒருவரது வாழ்வின் முடிவு எப்படியானதாய் இருக்கும் என்று விளக்கும் படியாய் குறுங்கதை ஒன்று எழுதப்பட்டு இருந்தது.
அதேபோல் மற்றொன்றிலும் நா. 132 என, கல்வியின் பெருமையைச் சொல்லும் குறுங்கதை.
மூன்றாவதாய் அவன் எடுத்ததில் நா. 234 என்று, கூடா நட்பை எரிந்த வைக்கோல் போருடன் ஒப்பீடு செய்யப்பட்ட குறுங்கதை இருந்தது.
கிருபாவிற்குப் புரிந்து போயிற்று, அந்த கதைகளிற்காகத் தான் சுந்தரவல்லி நாளிதழ்களைச் சேர்த்து வைத்திருக்கிறார் என்று.
அவனும் ஒவ்வொன்றாய் எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே அறிந்து கொண்டான், அதில் நாலடியார் பாடல்களைக் கதை வடிவில் கூறி இருக்கின்றனர் என. அனைத்தையும் எழுதியவர் 'ராம' என்ற பெயர் கொண்ட ஒருவரே!
அறம் பொருள் இன்பம் என மூன்று பிரிவுகளைக் கொண்ட நாலடி நானூறில், மூன்னூறுக்கு மேற்பட்டவைகளுக்கான கதை அந்நாளிதழ்களில் இருந்தது.
பெயரனைக் கவனித்த சுந்தரவல்லி, "என்ன செய்யிற கண்ணா?" என்றிட, நாளிதழின் அப்பகுதியைக் காட்டினான்.
புன்னகைத்து விட்டு நகர்ந்தவர், அன்றைய சமையல் பணியை மதுவிடம் இருந்து தான் பெற்று இருந்ததால், அதில் மூழ்கிப் போனார்.
மதிய உணவைப் பரிமாறிய மூத்தவரைக் கண்ட கிருபா, "இன்னைக்கு மது சமைக்கலயா பாட்டி?"
"யாரோ பார்க்க வந்தாங்கனு பேசிட்டு இருக்கா. பேசி முடிக்க நேரமாகும். அதான் இன்னைக்கு நான் சோறு வடிச்சிட்டேன். நானும் நல்லாதான் சமைப்பேன். சாப்பிடலாம் கண்ணா.?"
"ஐயோ பாட்டி! நான் எதுவும் சொல்லலையே? எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன். நீங்க போடுங்க!" எனத் தட்டில் உணவை வாங்கிக் கொண்டான்.
பெரியதாய் ஒன்றும் இல்லை. அனைத்து காய்களையும் பருப்பையும் போட்டு வேக வைத்துக் கடைந்து இருந்தார் சுந்தரவல்லி. தொட்டுக்கொள்ள மாங்காய் தொக்கு. மண் சட்டியில் சமைக்கப்பட்டு இருந்தது.
ஆவி பறக்கும் சோற்றில் அவர் வைத்த கூட்டுக் குழப்பை ஊற்றி, இரண்டு தேக்கரண்டி நெய் சுற்றிவிட்டுப் பிசைந்து வாயில் வைத்தது தான் மாயம், தொண்டையில் வழுக்கிக் கொண்டு உட்சென்று விட்டது.
இருபத்தோராம் நூற்றாண்டின் வகை வகையான மதுவின் தயாரிப்பு உணவுகள் சுவையின் உச்சம் என்றால், வல்லியின் கைப் பக்குவத்தில் உடலிற்கு வலு சேர்க்கும் அறுபதுகளின் மண் மணத்தோடு கூடிய பழைய உணவு வகை தனி ரகம். குறிப்பிட்டுச் சொல்ல இயலாது, கசப்பைத் தவிர்த்து ஐசுவையும் கலந்து இருந்தது.
“இந்த கிழவி செஞ்சது, உனக்குப் பிடிச்சிருக்கா கண்ணா.?”
“டேஸ்ட் அள்ளுது போங்க. வெரைட்டி இல்லனாலும், செஞ்ச ஒன்னும் மாஸ்!”
“என்னமோ சொல்லுற. அது விளங்கல, ஆனா உனக்குப் பிடிச்சிருக்குனு மட்டும் புரியிது!” என்று கனிவுடன் அவனது தலையை வருடிய மூத்தவரின் அண்மையில், வேறொரு மனிதனாய் மாறிப் போனதாய் உணர்ந்தான் கிருபா.
உண்மை தான். மதுரைக்கு வந்த பின் மாறிதான் போனான். சென்னையில் நெருக்கமான பாதுகாப்பு வட்டத்திற்குள்ளேயே இருந்து வெளியுலகைப் பற்றிய கவலை இல்லாது வாழ்ந்த கிருபா இல்லை அவன், தற்போது.
பக்கத்து வீட்டு சக மனிதருக்கும் சலிக்காமல் உணவு சமைத்து, எவரென்றே அறியாத உயிருக்கும் கருணைக் காட்டி, அறிந்தவர் தெரிந்தவரை எல்லாம் உறவாய் எண்ணும் அழகிய மனங்களுக்கு இடையே கழித்த தினங்களில், அவர்களது தாக்கம் அவனுள்ளும் உண்டாகி இருந்தது.
உண்டு முடித்தவன், "மது வீட்டுல இன்னைக்குச் சமைக்கலயா பாட்டி?"
"இல்ல கண்ணா."
"அப்ப சாப்பாடு?"
"வருவா இங்க!" என்றவர் பணியைக் கவனிக்கச் செல்ல, வாயிலிற்கு வந்தான் கிருபா. அங்கு நின்று எட்டிப் பார்த்தாலே, மதுவினது இல்லத்தின் உட்பகுதி வரைக் காணலாம்.
காலையில் தேநீர் அருந்தும் பொழுது அவளைப் பார்த்தது. அதன் பின்னர் கண்ணிலேயே படவில்லை.
மற்ற நாளாய் இருந்தால் இந்நேரத்திற்கு, நான்கு முறையேனும் பார்த்திருப்பான். ஏழெட்டு எண்ணிக்கையிலாவது 'மிஸ்டர் கிருபா.' என அவளின் அழைப்பு செவியை எட்டி இருக்கும். இன்று இவை இரண்டும் இல்லாது போனது.
'என்ன செஞ்சிட்டு இருக்க கிருபா? இப்படி எட்டிப் பார்க்கிறது தப்பு!' என மூளை அறிவுறுத்திட.. மனமோ, 'யார் வந்திருப்பா? யார்கூட இவ்வளவு நேரம் பேசுறானு தெரிஞ்சிக்க முடியலயே?' என்று அவளைப் பற்றி அறிந்து கொள்ள முரண்டு பிடித்தது.
சிறிது நேரத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவர் வெளியே வர, மதுவும் பின் தொடர்ந்து வந்தாள்.
"சரிம்மா, அப்ப நான் கிளம்புறேன்."
"ஓகே அங்கிள்!" என அவள் தலை அசைத்து வழியனுப்ப, "யார் இது?" என்றபடி அருகே சென்று நின்றான்.
"மிஸ்டர் கிருபா! இங்க என்ன செய்யிறீங்க நீங்க.?"
"காலையில இருந்து ஆளைக் காணோம். அதான் ஊர்ல தான் இருக்கீங்களா? இல்ல சொல்லாம கொள்ளாம எங்கேயும் போயிட்டீங்களானு பார்க்க வந்தேன்."
"அம்மாச்சிக்கிட்ட சொல்லி இருந்தேனே, உங்கட்ட சொல்லலயா.?"
"பாட்டிச் சொன்னாங்க தான்!" எனப் புன்னகைத்திட, சிரித்தாள் மது.
"என்ன ஆச்சு மிஸ்டர் கிருபா.?"
"சும்மா தான். போர் அடிச்சது."
"ஏன், இன்னைக்கு ஆஃபிஸ் ஒர்க் எதுவும் இல்லையா?"
"ப்ச்ச்.. ஃபிரீ."
"டைப் ரைட்டிங் தெரியுமா உங்களுக்கு.?"
"கிளாஸ் எதுவும் போகல. பட் ஓரளவுக்கு மேனேஜ் பண்ணிப்பேன்."
"அப்ப, என்கூட இன்ஸ்டிடியூட் வர்றீங்களா? சொல்லித் தர்றேன்."
அவன் சிரிக்க, "மிஸ்டர், ஐம் சீரியஸ்."
"சரி வர்றேன். பட், அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு."
அவள் கேள்வியாய்ப் பார்த்திட, "பாட்டியும் அவங்க சமையலும் உங்களுக்காக வெயிட்டிங்."
"சரி வாங்க." என்றவள் முன்னே செல்ல, ஆடவன் பின் சென்றான்.
தேவையான உணவை தானே எடுத்துக் கொண்டாள் மது.
இரண்டு வாய் எடுத்து வைத்திட, "என்ன சொன்னாங்க கண்ணு?" என வினவினார் வல்லி.
"பத்து நாலுல ஃபுல்லா முடிஞ்சிடும். அதுக்கு அடுத்து எதுவும் ஐடியா இருக்கானு விசாரிச்சாரு."
"நீ என்ன சொன்ன?"
"யோசிச்சு சொல்லுறேன்னு அனுப்பிட்டேன்."
"எதைப் பத்தியாவது எண்ணம் இருக்கா உனக்கு.?"
"இல்ல அம்மாச்சி. இனி முழுசா இன்ஸ்டிடியூட்ல கான்சன்டிரேட் பண்ணலாம்னு இருக்கேன்."
"அதுக்கு உன்னோட அப்பன் ஒத்துக்கணுமே.?"
"பார்த்துக்கலாம். மிஸ்டர் ராதா கிருஷ்ணனுக்கு என்மேல பாசம் அதிகம். அதுனால எதுவும் சொல்ல மாட்டாரு!"
இருவரது உரையாடலையும் கவனித்த கிருபா, "என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்? செண்டருக்குப் போறதைத் தவிர்த்து, வேற எதுவும் வேலை பார்க்குறீங்களா மிஸ் மது?"
"வேலைனு இல்ல. சில விஷயங்களை நம்ம பிடித்தத்துக்காக செய்வோம்ல? அதுமாதிரி ஒன்னு."
"ஓ.. ஓகே, ஓகே! எப்படிப் போகுது மாப்பிள்ளை பார்க்கும் படலம் எல்லாம்?"
"நல்லா தான போயிக்கிட்டு இருந்துச்சு? அதுக்குள்ள என்ன அங்க தாவிட்டீங்க? ஏன் மிஸ்டர் கிருபா?"
அவன் சிரித்திட, வல்லியும் புன்னகைத்தார்.
"அம்மாச்சி, யூ டூ..?"என அவள் பல்லைக் கடித்த நேரம், வெளியே ஆட்டோவின் சத்தம்.
"அப்பாவோட வண்டி சௌண்ட் மாதிரி இருக்கு?" என்று மது உரைக்க, மூவருமாய் வாயிலை நோக்கினர்.
கிருபா எழுந்து இரண்டடி எடுத்து வைக்க, உள்ளே நுழைந்தனர் சேது சித்ரா தம்பதியர்.
"மாம், டாட்.." என்றவனிற்குப் பேச்சே வரவில்லை. அடுத்த இரண்டாம் நொடி தந்தையை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், "எப்படி இருக்க மை பாய்.?"
"குட்! வாட் எ பிளசண்ட் சர்ப்ரைஸ்.?" என்றபடி விலகியவன், "அம்மா.." என அழுத்தமாய் அழைத்து அன்னையின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டான்.
கண்களில் நீருடன் மகனை முழுவதுமாய் பார்வையால் வருடிய சித்ரா, "வெயிட் குறைஞ்ச மாதிரி இருக்க கிருபா? கலரும் கம்மி ஆகிட்ட."
"மாம், எப்பவும் போல தான் இருக்கேன்."
"முதல்ல நீ கையைக் காட்டு!" என வலக்கை விரல்களைத் தொட்டுப் பார்த்திட, "குணமாகிடுச்சு மாம்."
"எங்கக்கிட்டயே சொல்லாம இருந்திருக்க, அவ்வளவு தைரியமாடா உனக்கு.? ஆனா அத்தை, நீங்க இப்படிச் செஞ்சிருக்க வேணாம்!" என மகனைக் கண்டித்து வல்லியிடம் மனத் தாங்கலாய் உரைக்க, "நான் என்னமோ, உன் பிள்ளை கையைப் பிடிச்சு ஃபேன் இறக்கைக்குள்ள விட்ட மாதிரி பேசுற.?" என்று வினா எழுப்பினார் மூத்தவர்.
"ம்மா.. தப்பு என்னோடது. பாட்டியை எதுக்கு நீங்க இதுல இழுக்குறீங்க?"
"பின்ன என்னடா? நடந்தது நடந்திடுச்சு சரி. எங்கக்கிட்ட விபரம் சொல்லி இருக்கணும்ல.?"
"நான்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். நீங்க எது சொல்லுறதா இருந்தாலும், என்னைச் சொல்லுங்க!"
"நல்லவன் மாதிரியே பேசுடா நீ!"
"மாம். ஐம் எ குட் பாய், யூ நோ!" என்றிட, சிரித்துவிட்டு, "எப்படி இருக்கீங்க சித்தி?" என மூத்தவரின் நலனை விசாரித்தார் சேது.
"நல்லா இருக்கேன். வர்றதை சொல்லவே இல்ல.?"
"சித்ரா, கிருபாவைப் பார்த்தே ஆகணும்னு சொல்லிட்டா. அதான் சர்ப்ரைஸா வரலாம் சொல்லல. கிருஷ்ணனுக்கே, திண்டுக்கல் வர்றப்ப தான் கால் பண்ணேன். ஸ்டேஷனுக்கு ஆட்டோ எடுத்துட்டு வந்துட்டாரு."
"ஒரு வாரத்துக்கு இருப்பீங்க இல்ல சேது?"
"இல்ல சித்தி, மூனு நாள் தான்."
"நாலு நாள் சேர்த்து லீவ் போடக் கூடாது.?"
"தரணும் இல்ல? காலியா இருக்க வேலைக்கு இன்னும் ஆள் போடல. அந்த வேலையையும் சேர்த்து நாங்கதான் பார்க்க வேண்டியது இருக்கு. இதுல லீவ் எல்லாம் போட்டா, அவ்வளவு தான். கவர்மெண்ட் வேலைனு, பேருதான். அதுக்கு ஐடி கம்பெனி கூட பரவாயில்ல போல. பாருங்க, வீட்டுல இருந்தே வேலை. மாசம் ஆனா, அக்கௌண்ட்ல சேலரி!" என அவர் மகனைப் பார்த்தவாறே உரைக்க,
"அட, நீ வேற சேது! நல்ல வேலை பார்க்கிறான் உன்னோட மகன். மீட்டிங் மீட்டிங்னு, நிம்மதியா ஒரு வாய் சோறு திங்க விட மாட்டிறானுங்க. ராத்திரிக்கு எல்லாம் ஃபோன் பேசுறானுங்க."
சேதுவும் சித்ராவும் சிரிக்க, "சரி வந்து முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் பேசலாம்!" எனச் சூழலை மாற்றினார் வல்லி.
"கிருஷ்ணா.. நீயும் வாயா." என்று அழைத்திட, "சரி அம்மாச்சி, நான் செண்டருக்குக் கிளம்புறேன்." என விடை பெற்றாள் மது.
"சரி கண்ணு! பார்த்துப் போ." என்று அவர் தலை அசைத்திட, "மாம், டாட்.. இவங்க மிஸ் மது! கிருஷ்ணன் அங்கிள் பொண்ணு!" எனப் பெற்றோரிற்கு அறிமுகம் செய்தான் கிருபா.
"வணக்கம்!" என்று இருவருக்கும் பொதுவாய் கைக்கூப்பியவள், "பேசிட்டு இருங்க. செண்டர்ல ஆள் இல்ல. போயாகணும்." எனக் கிளம்பினாள்.
வாயிலில் காலணியை அணிந்த தருணம், "அம்மா அப்பா வந்திருக்கிறதால இன்னைக்கு முடியாது. இன்னொரு நாள் உங்கக்கூட வர்றேன். டைப் ரைட்டிங் சொல்லிக் கொடுங்க மிஸ் மது!" என்று அவன் குரல் உயர்த்தி உரைத்திட, சம்மதத்தைப் புன்னகையில் தந்துவிட்டுச் சென்றாள் பாவை.
சித்ராவிற்கு மகனின் நிலைப்பாட்டில் மனம் மலர, சேது அவனைக் கூர்ந்து நோக்கினார்.
அதைக் கவனித்தவன், "என்னப்பா, அப்படிப் பார்க்கிறீங்க.?"
"இல்ல, என் மகன் தொண்டையில இருந்து இவ்வளவு சௌண்ட் வருமானு தான். லோ வாய்ஸ்ல தானடா எப்பவும் பேசுவ.?"
"இப்ப மெதுவா பேசுனா, அங்க இருக்கிற மிஸ் மதுவுக்கு எப்படிக் கேட்கும்? அதான் லௌடா சொன்னேன். அதென்ன வந்ததுல இருந்து என்னையே ரிசர்ச் பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?"
"வந்ததே உன்னைப் பார்க்கத்தான்டா!" எனச் சேது மகனின் தோளில் கையிட்டு நடக்க, கிருபாவும் உடன் இணைந்து கால்களை எட்டு வைத்தான்.

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.