11. பூக்கள் பூக்கும் தருணம்
“நாளை இந்த வேளை பார்த்து
ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”
சுசீலாவின் இனிமையான குரல் காற்றை நிறைத்துக் கொண்டிருக்க, சீட்டில் சாய்ந்த படி கண்ணாடி வழியே தெரிந்த வானத்தைப் பார்த்து விரல்களால் தாளமிட்டுக் கொண்டிருந்தான் பூபதி.
“பேசலாமா? ஃப்ரீயா இருக்கீங்களா?”
திடீரென்று அருகில் கேட்ட பழக்கமான குரலில் டபக்கென்று எழுந்து அமர்ந்தான். சித்ரா தயக்கம் நிரம்பிய முகத்துடன் நின்றிருந்தாள். தயக்கம் ஒருபுறம் இருந்தாலும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்பது போல் இருந்தது அவளுடைய பார்வை.
“வாங்க வாங்க!” என்று பாடலை நிறுத்தினான் பூபதி.
“நல்ல பாட்டு தானே? போடுங்க” என்றாள் சித்ரா. சத்தத்தைக் குறைத்து வைத்தான். “நல்ல செட்டு (மியூசிக் சிஸ்டம்).. சத்தம் நல்லா கேக்குது” என்றான் அவனுக்கு முன்னால் இருந்த ஸ்பீக்கரைக் காட்டி. அப்படியே இறங்கி வெளியே வந்து நின்று கொண்டான்.
அவனது புதிய லோடு ஆட்டோவை ஒதுக்குப்புறமான ஒரு தெருவில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் நிறுத்தி வைத்திருந்தான். இப்பொழுதுதான் மாதாந்திரத் தவணை அனைத்தும் முடிந்து வண்டி அவனுக்கு முழு சொந்தமாகி இருந்தது.
“முதலாளியம்மா வந்துருக்கீங்க.. பாட்டு கிடக்குது பாட்டு.. எப்பவும் கேக்குறது தானே” என்றான்.
“பழைய பாட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ல.. ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தீங்க” என்று சித்ரா சொல்ல,
“ஆமாங்க.. இப்ப இளையராஜா பாட்டு கேட்டாலே பூமரு, கிரிஞ்சு அப்படின்னு சொல்லிருதுங்க பிள்ளைங்க.. நான் அதுக்கும் பழைய காலம்.. 40, 50 வருஷம் முன்னாடி வந்த பாட்டுகளைக் கேட்டுகிட்டு இருக்கேன்.. ஆனா அதுதான் என் மனசை அமைதியா வைக்குதுன்னு நினைக்கிறேன்” என்றான்.
“ம்.. தெரியும்.. நானும் ஆட்டோல போகையில, வரையில நீங்க போடுற பாட்டுகளைக் கேட்டுட்டுத் தானே வர்றேன்.. அப்புறம்.. அது என்ன முதலாளியம்மான்னு சொல்றீங்க? நீங்க தனிக்காட்டு ராஜால்ல?”
“இப்ப நீங்க தான் எனக்குப் படியளக்கறீங்க.. ரெகுலரா, பாதிக்கு மேல உங்க யூனிட் ஆட்களோட சவாரியும், கார்மெண்ட்ஸ் லோடு ஏத்துற வேலையும் தான் ஓடுது.. ரெண்டு வண்டி ஓடுறதால தான் தங்கச்சிங்க கல்யாணத்தை முடிச்சு வீட்டிலேயும் மாடியெடுத்துக் கட்டி இருக்கேன். அப்ப நீங்க தானே எனக்கு முதலாளி”
“அட! அதுக்கு முன்னாடி நீங்க வண்டியே ஓட்டல பாருங்க..”
அது வழக்கமாக பூபதி ஆட்டோவை நிறுத்தும் பகுதி. மற்ற வாகன ஓட்டிகள் போல அவன் ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவதில்லை. வீட்டில் அல்லது ஒதுக்குப் புறமான, நிழல் படர்ந்த தெருக்களில் நிறுத்திக் கொள்வான். அவனுடைய சவாரிகள் பெரும்பாலும் நன்கு அறிமுகமானவர்கள், அலைபேசி மூலமாகத் தான் அழைப்பார்கள். இப்போதெல்லாம் வேலை அதிகமாகி விட்டது. இப்படி ஓய்வாக அமர்ந்து பாடல் கேட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன.
தனியாக ஒரு பெண் லோடு ஆட்டோவின் அருகில் நிற்கிறாளே, என்ன விஷயம் என்று அந்தப் பக்கமாக வந்த காவல்துறை வாகனம் அவர்களது அருகில் வந்து நின்றது. “என்ன மேடம்? எதுவும் ஹெல்ப் வேணுமா? என்று கேட்டவர்கள், பின் பூபதியைப் பார்த்துவிட்டு, “ஓ! பூபதியா? அப்ப பிரச்சனை இல்ல.. அவனே பார்த்துப்பான். நல்லா இருக்கியாப்பா?” என்று கேட்டபடி கடந்தார்கள்.
“பரவாயில்லையே.. ஊர் பூரா நல்ல பேர்தான் எடுத்து வச்சிருக்கீங்க..? திறமையான, அன்பான ஆட்டோக்காரர் போல” அப்பொழுது எஃப்.எம்.மில் சுசீலாவின் குரல் மாறி வாணி ஜெயராம் ஆரம்பித்திருந்தார், “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்…” என்று.
“நியாயப்படி சிட்டுவேஷன் சாங் இப்ப ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ பாட்டு போடணும் இல்லங்க?” என்றான் பூபதி.
சிக்கனமாகச் சிரித்தாள் சித்ரா.
“பேச வந்ததை விட்டுட்டு என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கோமோ?” என்று கேட்டான் பூபதி.
“என்ன பேச வந்தேன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றான் சித்ரா
“ம்ஹும்..?”
“தெரியாத மாதிரி நடிக்காதீங்க. நீங்களும் சின்னப் பிள்ளை இல்லை, நானும் சின்னப் பிள்ளை இல்லை..”
“போன வாரம் என் தங்கச்சிங்க வந்து கல்யாணம் பேசினது பத்தி தானே? எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லைங்க”
“அப்படிங்களா? உங்களுக்கு சம்பந்தம் இல்லையா? ராமச்சந்திர பூபதின்னா நீங்க இல்லையா பின்ன?”
“அட, எனக்கும் அந்த ஐடியாவுக்கும் தான் சம்பந்தம் இல்லைன்னு சொன்னேன். எம்பேரு தான் ராமச்சந்திர பூபதி”
அனிதாவும் நர்மதாவும் சென்று, ‘எங்க அண்ணனுக்கு பொண்ணு தரீங்களா?’ என்று கேட்டது முதல் பூபதி வீட்டில் முறைத்துக் கொண்டே திரிந்தான். “அது என்ன, என்கிட்ட கேட்காம நீங்களாப் போய் பொண்ணு கேட்கிறது? லேடீஸ் மட்டுமே இருக்கிற வீடு.. என்னை நம்பி பழகுறாங்க. பொசுக்குன்னு இப்படி பொண்ணு கேட்டீங்கன்னா என்ன அர்த்தம்?”
“டேய் அண்ணா! பொண்ணு தானேண்ணா கேட்டோம். வேற எதுவும் கேட்கலையே? இதை விட டீசண்டா எப்படிக் கேக்குறது?” என்று கேள்வி எழுப்பினாள் அனிதா.
“அதானே!” என்றான் அவள் கணவன்.
“நீங்க சும்மா இருந்தா மச்சான். எப்பவும் அவளுக்கு ஆமாம் சாமி போட்டுக்கிட்டு” என்று பூபதி சொல்ல,
“அவங்க செஞ்சது என்ன தப்புங்கிறேன்? உங்களுக்கு எடுத்துச் செய்ய நாங்க தான் பெரியவங்கன்னு இருக்கோம்” என்று நர்மதாவின் கணவன் சொல்ல,
“ஏது..? நீங்க? நீங்கல்லாம் பெரியவங்க? என்றான் பூபதி. அனிதா, நர்மதா இருவரின் கணவர்களும் பூபதியை விட வயதில் சிறியவர்கள் தான். ஓரளவுக்கு அவனுக்கு முன்பே பழக்கமானவர்களும் கூட. தெரிந்தவர்களாக, கலகலப்பாக பழகும் மனிதர்களாகப் பார்த்து தான் தங்கைகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தான்.
அம்மாவும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல் சிறு வயதிலிருந்தே ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, அங்கே இங்கே வேலை பார்த்துப் படித்த பிள்ளைகள் என்று பலருக்கும் பூபதியின் மேலும், அவன் தங்கைகள் மேலும் பிரியும் அதிகம். பூபதி பத்தாவதுடன் நிறுத்திவிட்டு கிடைத்த வேலைகளுக்குச் சென்றான். ஒரு வேனில் கிளீனராக ஓடியவன் மெல்ல மெல்ல வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு முதலில் வாடகைக்கு வண்டி எடுத்து ஓட்டினான். அவன் ஆட்டோ ஓட்டத் துவங்கிய காலத்திலேயே பல குடும்பங்களுடன் நல்ல பழக்கம். அவற்றில் இரண்டு குடும்பங்களில் இருந்த தான் தங்கைகளுக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைத்திருக்கிறான். இருவரும் பூபதியைப் பார்த்து வளர்ந்தவர்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
“வயசுல சின்னவங்களா இருக்கலாம், ஆனா நாங்க எல்லாம் குடும்பஸ்தங்களாயிட்டோம். கல்யாணமானாலே அங்கிள் தான். தெரியும்ல? இவ ஆன்ட்டி” என்று அனிதாவின் கணவன் சொல்ல,
“சும்மா இருங்க. என்னை கிழவி, ஆன்ட்டி அப்படி எல்லாம் சொல்லலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே” என்றாள் தன் குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டியவாறு.
“இன்னைக்கு மம்மி, நாளைக்கு பாட்டி”
“அப்ப நீங்க இன்னைக்கு டாடி, நாளைக்கு தாத்தா”
“உங்க பஞ்சாயத்தை விடுங்க. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அங்கே போய் பொண்ணு கேட்டீங்களே? ஏன்?”
“சரி அப்புறம் வேற எதுவும் பொண்ணைப் புடிச்சிருக்கா? சொல்லுங்க, அங்கே போய் கேட்கிறோம். அதுவும் இல்லையா.. மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைக்கிறோம். இன்னைக்குத் தேதிக்கு நீங்க மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர். ரெண்டு வண்டிக்கு முதலாளி, சொந்த வீடு இருக்கு.. நான் நீன்னு போட்டி போட்டு பொண்ணு தருவாங்க” நர்மதாவின் கணவன் விளக்கமாகக் கூற,
“அதெல்லாம் கிடையாது மச்சான். சும்மா சொல்லாதீங்க. படிக்காதவன், ராப்பகலா வண்டில அலையிறவன், வீட்ல பெரியவங்க இல்ல.. பொண்ணு கொடுக்க மாட்டேன்னு ஏகப்பட்ட பேர் சொல்லியாச்சு”
“சும்மா கதை விடாதீங்க மச்சான். அப்ப மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைக்கவா? அதைச் சொல்லுங்க” என்று கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று கடுகடுத்தபடியே சட்டையைப் போட்டு வெளியே கிளம்பினான் பூபதி.
“அண்ணா! யார் கிட்ட காதுல பூ சுத்துற? என்கிட்ட தப்பிக்க முடியாது. இப்போ உன்னோட ப்ளே லிஸ்ட்ல எல்லா பாட்டும் சித்திரம், சித்திரை இப்படித்தான் ஆரம்பிக்குது. நீயே கவனிச்சியா கவனிக்கலையா தெரியல.. அதே ப்ளே லிஸ்ட் தான் மாறி மாறி ஓடிட்டு இருக்கு வீட்ல.. அந்தக் காலமா இருந்தா கேசட்ல பதிவு பண்ணி வச்சு அட்டையில பாட்டு பேர் எழுதி வச்சிருந்திருப்பே.. ஆதாரப்பூர்வமா காட்டிருப்பேன்.. இப்ப உன் ஃபோனைத் தா.. நான் காட்டுறேன்” என்றாள் நர்மதா.
“தேடித் தேடி கேசட்ல, சிடில நிலா பாட்டு, சூரியன் பாட்டு, மலை பாட்டுன்னு பதிஞ்சு வச்ச அண்ணன் இப்போ சித்ரா பாட்டா வைக்கிறானாக்கும்.. நான் கவனிக்கலையே..?” என்றாள் அனிதா.
“நீ உன் வேலையைப் பாரு.. பிள்ளையைப் பெத்தியா.. அதைப் பாத்தியான்னு பேசாம இருக்கணும்” பூபதிக்கு வெட்கம் வந்தாலும் அதைப் பொய்க்கோபத்தால் மூடி மறைத்தான்.
“எங்க.. டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு வரணுமேன்னு வந்துட்டு, இங்க வந்தும் நான் தானே எல்லா வேலையும் செய்யிறேன்.. எனக்குன்னு ஒரு அண்ணி இருந்தா அவங்க என்னை உட்கார வச்சு சோறு போட மாட்டாங்களா? அவசரத்துக்கு இப்படி தொட்டில் ஆட்ட மாட்டாங்களா?” வராத கண்ணீரை நைட்டி மேல் போட்டிருந்த துண்டால் துடைத்துக்கொண்டே பேசினாள் அனிதா.
நர்மதா வாயை மூடிக்கொண்டு சிரிக்க,
“நல்லா வருவீங்க டி இரண்டு பேரும்” என்று சிரித்துக் கொண்டே வாசலில் இறங்கினான் பூபதி.
“அண்ணே அண்ணே பிளே லிஸ்ட் அண்ணே..” என்று நர்மதா பாடிய பாடல் அவனை இன்னும் புன்னகை பூக்க வைத்தது.
சித்ரா நிறுவனம் தொடங்கி, அதற்கு அண்ணன் வண்டிகள் ஓட்ட ஆரம்பித்த சில நாட்களில் அண்ணன் ஒரு நிலையில் இல்லாமல் இருந்ததை முதலில் கண்டுபிடித்தவள் நர்மதா. அவள் அப்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியை எதிர்நோக்கியிருந்தாள். மனதில் வருங்காலக் கணவன் மேல் காதல் பூத்திருந்தது. காதல் நுழைந்தால் ஒரு ஆள் என்னவெல்லாம் செய்வான் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து வந்ததால் அண்ணனிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களும் கண்ணில் பட்டன. அவ்வப்போது, ‘அந்தப் பொண்ணு சித்ராவைப் பாரு.. உன் அளவுக்குப் படிக்காதவ.. இருந்தாலும் எவ்வளவு தைரியமா இருக்கா?’ என்றெல்லாம் அண்ணன் அறிவுரை என்ற பெயரில் சித்ராவின் புகழ் பாடவும், சந்தேகம் உறுதியானது. நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தவள் அனிதாவிடம் விஷயத்தைச் சொல்ல, இருவருமாகக் களத்தில் இறங்கி விட்டார்கள். புகுந்த வீட்டின் ஆதரவும் இருவரையும் உற்சாகப்படுத்த, நேரே வெற்றிலை பாக்கு பழத்துடன் சென்று பெண் கேட்டு விட்டனர்.
சத்தியபாமாவுக்கும் சுப்பம்மாளுக்கும் அன்று அவர்கள் பெண் கேட்டதும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
சுப்பம்மாளுக்கு அவர்கள் யார் என்று தெரியாததால் சத்தியபாமா, “இவங்க பூபதியோட தங்கச்சிங்கம்மா.. நல்லா படிச்ச புள்ளைங்க.. இவ கவர்மெண்ட் வேலை பார்க்கிறா, இவ பிரைவேட் ஸ்கூல்ல நல்ல சம்பளத்துக்கு டீச்சரா இருக்கா. ரெண்டு பேரும் சனி, ஞாயிறு நம்ம டியூஷன் சென்டர்ல வகுப்பு எடுக்கறாங்க” என்று அறிமுகப்படுத்த,
“அண்ணி! என்னண்ணி! திடீர்னு பொண்ணு கேட்டு வந்திருக்காங்க.. ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருந்தாங்களா?” என்றார் சுப்பம்மாள். அவருக்கு இன்னும் மன வருத்தம் தான், சத்தியபாமா தன் மகளின் பாசத்தை பங்கு போட்டுக் கொண்டாரே என்று.
தப்பாக நினைத்துக் கொண்டாரோ என்று சத்யபாமாவும் பதறிப் போனார். “சேச்சே! அதெல்லாம் இல்ல அண்ணி.. இப்ப இவங்க வந்து கேட்கிறப்ப தான் எனக்கே தெரியும். நாம பேசி முடிவு பண்ணலாம்.. பூபதி தங்கமான பிள்ளை இந்த பிள்ளைங்க மூணும் அம்மா அப்பா இல்லாம் இருக்குதுங்களே.. நான் பிள்ளை இருந்தும் இல்லாம இருக்கேனே.. இதுங்க மூணும் என் வயித்துல பொறந்திருக்கக் கூடாதா அப்படின்னு நான் நிறைய நாள் ஏங்கி இருக்கேன்.. இப்ப இந்தக் கல்யாணம் நடந்தா சந்தோஷம்தான். அவங்களும் நம்ம குடும்பமாயிடுவாங்க” என்றார்.
பின் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு அனிதாவும், நர்மதாவும் செல்ல, “அண்ணி, இன்னும் உங்க பையன் தானே என் பொண்ணோட புருஷன்? வேற கல்யாணம் பண்றதைப் பத்தி எனக்கும் சிந்தனையாத்தான் இருக்கு.. ஆனா..” என்று இழுத்தார் சுப்பம்மாள். சட்டச் சிக்கல்கள் வருமா, மீண்டும் முகுந்தன் வந்து நின்றால் என்ன செய்வது என்று சந்தேகம். அதை சத்யபாமாவிடம் எப்படி வாய் விட்டுக் கேட்பது என்றும் அவருக்குத் தயக்கம்.
“அம்மா உன்கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தோம். அத்தை டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்காங்க.. நான் உன்கிட்ட கூட சொல்லல. ஒன்னு ரெண்டு தடவ கோர்ட்டுக்கு போயிட்டு வந்துட்டேன். சீக்கிரம் கிடைச்சுரும்னு வக்கீல் சொல்லி இருக்காரு” என்றாள் சித்ரா.
“சாரி ஆன்ட்டி! வண்டிச் சாவியை வச்சிட்டுப் போயிட்டேன்” என்றபடி உள்ளே வந்த நர்மதா, இவர்கள் உரையாடலின் கடைசிப் பகுதியைக் கேட்டுவிட்டு, “சீக்கிரமே டைவர்ஸ் கிடைச்சுடும்னு கேள்விப்பட்டோம் ஆன்ட்டி! அந்த வக்கீல் அண்ணா எங்களுக்குத் தெரிஞ்சவர் தானே.. எதேச்சையா அன்னிக்கு வழியில் பார்க்கிறப்ப அண்ணா கிட்ட சொன்னாரு.. அதனாலதான் அண்ணாவுக்குக் கூடத் தெரியாம நாங்க ரெண்டு பேரும் வந்தோம். பேசிட்டு நல்ல முடிவாச் சொல்லுங்க. எங்களைத் திட்டனும்னு நினைச்சாலும் பரவாயில்லை, நல்லா திட்டிக்கோங்க.. ஆனா பொண்ணு மட்டும் கொடுத்துடுங்க. ப்ளீஸ்!” என்று சொல்லிவிட்டு சித்ராவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுச் சென்றாள்.
இதெல்லாம் நடந்தது ஒரு வாரத்திற்கு பின் தான் சித்ரா பூபதியை சந்திக்கிறாள்.
அடுத்து தான் முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதை அனைவரின் பேச்சுக்களும் சித்ராவுக்கு உணர்த்தின. வீட்டில் அனைவருமே இந்த சம்பந்தம் தகைந்தால் நல்லது என்பது போல் பேசினார்கள். வழக்கறிஞர் அழைத்து, ‘நீதிபதி விவாகரத்து ஆணை தயார் செய்து விட்டார், இன்னும் ஒரு வாரத்தில் கைக்குக் கிடைத்துவிடும்’ என்று சொன்னார்.
ஒவ்வொரு சமயம் இன்னொரு திருமணம் எல்லாம் எதற்கு, இப்படியே வேலை, தொழில் தம்பி தங்கைகள் என்று வாழ்வை ஓட்டி விடலாமா என்று தோன்றும். மற்றொருபுறம் பாவம், அம்மாவும், அத்தையும் என்னை நினைத்து வருந்தி கொண்டே இருக்கிறார்கள்.. நல்லவனாகக் கிடைத்தால் திருமணம் செய்தால் என்ன என்றும் தோன்றும். நீ சின்னப் பொண்ணு.. கல்யாணம் பண்ணிக்கிற வயசு இல்ல என்று அந்தத் திருட்டுக் கல்யாணத்தின் போது மணிமேகலை சொன்னதெல்லாம் எவ்வளவு உண்மை என்று இப்போது புரிந்தது. இப்பொழுதுதான் வயது 25 முடிகிறது. தொழில் நடத்தி வரும் அனுபவம் இன்னும் முதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. தவறோ, சரியோ இனிமேல் தான் எடுக்கும் முடிவு தான் தன் வாழ்க்கைக்கு. குழந்தைத் தனத்தை அறவே விட்டுவிட வேண்டும் என்று அவளே பலமுறை அவளுக்குச் சொல்லிக் கொண்டாள்.
மறுமணம் என்று சத்தியபாமாவும், சுப்பம்மாளும் பேசிய போதெல்லாம் ஏற்கனவே மணமாகி விவாகரத்தானவன், அல்லது மனைவியை இழந்த ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள், என்று சித்ரா நினைத்திருக்க, இதுவரை மணமாகாத ஒருவனுக்குத் தன்னைப் பெண் கேட்பார்கள் என்று நினைக்கவில்லை. பூபதிக்குத், தான் பொருத்தமானவளா, அவனுக்குத் திருமணத்தில் விருப்பமா என்று பல கேள்விகள் அவளுக்குள்.
அவர்கள் இருவரும் பெண் கேட்டு விட்டுச் சென்ற பின் சத்தியபாமா நீண்ட நாட்களுக்குப் பின் கோவிலுக்குச் சென்றார். இந்த சம்பந்தம் அமைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்தார். சுப்பம்மாளுக்கு இந்த கலகலப்பான பெண்கள் இருக்கும் வீட்டில் மகள் திருமணமாகிப் போனால் எப்படி இருக்கும் வண்ண வண்ண கற்பனைகள் தோன்றின. அவருக்கு பூபதியை ரொம்பவும் பிடிக்கும்.
நிறைய கேள்விகளுடன் வந்துவிட்டு இப்பொழுது இரண்டு பேரும் கொண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போல் ஏதேதோ பேசுவதை போல் தெரியவும், “உங்ககிட்ட சொல்லிட்டு பொண்ணு கேட்க வந்தாங்களா?” என்று நேரடியாகவே கேட்டாள் சித்ரா.
“இல்லைங்க! போயிட்டு வந்த பிறகு தாங்க தெரியும்.. எனக்கு தெரிஞ்சிருந்தா நான் அனுப்பியிருக்கவே மாட்டேங்க” என்று பூபதி கூறியபோது சித்ராவின் முகத்தில் லேசான சுணக்கம்.
“அப்ப வேணாம்னு உங்க தங்கச்சிக்கு கிட்ட சொல்லிடுங்க”
ஒன்றும் பேசாமல் ஆட்டோ மேல் தாளமிட்டபடி நின்றிருந்தான். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், “ரொம்ப நேரமா நின்னுட்டே இருக்கீங்க.. உக்காருங்க” என்றபடி பூபதி சுற்றிப் பார்த்தான்.
எங்கே உட்காரச் சொல்வது, சவாரிக்கு என்றால் வண்டிக்குள் உட்காருங்கள் என்று உரிமையாகச் சொல்லலாம். இது வாழ்க்கைப் படகில் சவாரி செய்வது பற்றிய விவாதம். பட்டப்பகலில் சும்மா ஒரு பெண்ணுடன் ஆட்டோவில் அமர்ந்து பேசுவது நன்றாக இருக்குமா?
“நம்ம ஊர்ல பிசினஸ் டாக்குக்கு ஏத்த இடம் ஒண்ணு கூட இல்லை இல்லீங்க?” என்றாள் சித்ரா.
“பிசினஸ் டாக்கா? சரிதான்” என்று பூபதி தலையை ஆட்டிக் கொள்ள,
“சரி, நேரா விஷயத்துக்கு வரேன். அவங்க சொன்ன விஷயத்துல உங்களுக்கு சம்மதமா?” என்றாள் சித்ரா
“புரியலையே?” என்றான் பூபதி.
“நிஜமா புரியலையா.. இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களான்னு புரியல. என்னோட குழப்பங்கள் சந்தேகங்களை நேரா கேட்டுடறேன்.. நீங்க ஒன்னும் தெரியாத மனுஷர் இல்லை.. கடந்த மூணு வருஷமா தினசரி பார்க்கறோம்.. உலகத்துல எல்லா விஷயத்தையும் பத்தி பேசிருக்கோம். இதையும் பேசிடலாம்னு நினைக்கிறேன். பேசவா?” என்றாள் சித்ரா.
“அட! சொல்லுங்க..”
“நான் சாதாரண பொண்ணுங்க மாதிரி கிடையாது. ஏற்கனவே கல்யாண ஆனவ.. இப்போ டைவர்ஸ் ஆகப் போகுது. நீங்க ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்?”
“இப்ப டைவர்ஸ் ஆர்டர் மட்டும் கையில வரட்டும்.. உங்களை வரிசையா நிறைய பேர் வந்து பொண்ணு கேப்பாங்க பாருங்களேன்.. அப்ப இருக்கிறதுலயே நான்தான் உங்க லிஸ்ட்ல கடைசியா இருப்பேன்.. என்னைப் போய் தகுதியான மாப்பிள்ளைன்னு சொல்றீங்க? நான் அப்படி ஒரு தகுதியான மாப்பிள்ளையா இருந்திருநதா எனக்கு எப்பவோ கல்யாணமாகி இருக்காதா?” என்றான் பூபதி.
“இப்ப என்னதான் சொல்ல வரீங்க? உங்க வீட்ல இருந்து வந்து பொண்ணு கேட்டிருக்காங்க.. அதான்..அதான் ..
..ப்ச்.. ச்சே.. நான் பேச வந்ததே தப்புன்னு தோணுது. வழக்கமா பொண்ணு பாக்க வரும் போது பொண்ணு கிட்ட ஆம்பள பேச வேண்டிய டயலாக் எல்லாம் இப்ப நான் பேசிட்டு இருக்கேன்.. என்ன இருந்தாலும் எனக்குக் கூச்சமா இருக்காதா? நேரடியா பேசலாம்னு அப்பவே இருந்து சொல்றேன்.. வளவளன்னு பேச்சை எங்கேயோ கொண்டு போறீங்க?” கோபம் வந்தது சித்ராவுக்கு.
இரண்டு மூன்று முறை பெருமூச்சு விட்டாள்.
பூபதி எதுவும் பேசாமல் கையைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்.
“சரி விடுங்க.. அப்புறமா.. பொறுமையா நான் என்ன பேசலாம்னு யோசிச்சிட்டு வரேன்.. தெளிவா இன்னொரு நாள் பேசுவோம்” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள் சித்ரா.
“ஏங்க! நில்லுங்க.. அவங்க வந்து பொண்ணு கேட்டது எனக்குத் தெரியாது தான். ஆனா கட்டிக்கிட்டா உங்களைத் தான் கட்டிக்கணும்னு மனசுக்குள்ள எப்பவோ முடிவு பண்ணி இருக்கேன். இதுவரைக்கும் யாருகிட்டயும் சொல்லல.. இப்பதான் உங்க கிட்ட சொல்றேன்* என்றான் பூபதி
அப்போது பார்த்து ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே..’ என்ற பாட்டை மிகச் சரியாக எப்படித் தேர்ந்தெடுத்து எஃப்.எம். காரர்கள் ஒளிபரப்பினார்கள் என்பது யாருக்கும் புரியாத மர்மமாகவே இருந்தது.
தொடரும்.

Author: Sungudi
Article Title: உருகியோடும் 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.