- Joined
- Jun 17, 2024
- Messages
- 31
புண்ணியம் செய்துநல்ல
புனலொடு மலர்கள்தூவி,
எண்ணுமி னெந்தைநாமம்
இப்பிறப் பறுக்குமப்பால்,
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து,
அண்ணலார் கமலபாதம்
அணுகுவார் அமரராவார்.
திருவாய்மொழி
என்னுரை...
கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம் என்று பள்ளி நாட்களில் உருப்போட்டதைத் தாண்டி, அதிகம் யோசித்ததில்லை. பிறகு, வைஷ்ணவ திவ்ய தேசங்கள் குறித்தும், திருவாங்கூர் அரசர்கள் பற்றியும் படித்தபோதும் அப்படியே.
ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் சிரம், திருமேனி, சரணங்கள் மூன்றும் ஒரு யோஜனை நீளம் (~15 கி.மீ) இருந்ததாகக் கேள்விப்பட்டதில்
வியந்து, திருவல்லாவிற்கும் திருப்பாதவூருக்குமான தொலைவை தேடிப் பார்க்க வரைபடம் பதினாறு கிலோமீட்டர் என்றதில் தொடங்கியது ஆவல்.
2011 ல் தலைப்புச் செய்திகளில் அனந்தபுரத்துக் கோவிலின் நிலவறைப் பொக்கிஷங்களைப் பார்த்ததில் வியப்பு அதிகரித்தது.
தள்ளிப்போய்க்கொண்டே இருந்த பயணம் அருகில் வர வர, இணையம், புத்தகங்கள், திருவாங்கூர் சரித்திரம், ஸ்வாதித் திருநாள் திரைப்படம் என முழுதாய் ஒரு சுற்று வந்தேன்.
இதில் ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியைத் தாண்டி என்னைக் கவர்ந்தவை:
1 மஹாராஜா ஸ்ரீ அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் பரிபூரண சரணாகதி. ஒரு அரசராக ஆக்ரோஷமான பல போர்கள் புரிந்து, அவருக்குச் சரியெனப் பட்ட விதத்தில் நீதி வழங்கி ஆட்சி செய்த மன்னர், ஒரு பெரும் போருக்குப் பின், மனம் நொந்து, தன்னை, தன் பரம்பரையை, ராஜ்ஜியத்தை ஸ்ரீபத்மநாப ஸ்வாமிக்கு அர்ப்பணித்தார்.
மஹாராஜாவின் இந்த மனமாற்றம் அசோகரின் மனமாற்றத்துக்கு இணையானதாகவே எனக்குத் தோன்றியது.
2 ஸ்ரீஸ்வாதித் திருநாள் மஹாராஜா, தியாகைய்யர், ஆண்டாளைப் போலவே பாடல்கள் பல இயற்றி, தன் கடைசி நாட்களை, தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு அனந்தனின் நினைவிலேயே கழித்தார்.
3 ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் மீதான திருவாங்கூர் மன்னர்களின் கேள்வி கேட்காத விஸ்வாசமும் நம்பிக்கையும்.
இந்தப் புத்தகம் ஆன்மீகம், புனைவு, சரித்திரம், நிகழ்காலம் என எல்லாம் கலந்த கலவை.
மற்றபடி அனைத்தும்
ஸ்ரீ அனந்தபத்மநாபனே!
He is all by Himself!
நன்றி
வேதா விஷால்

Author: VedhaVishal
Article Title: என்னுரை...
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.