Narmadha Subramaniyam
Member
- Joined
- Mar 23, 2025
- Messages
- 75
"என்னடி அரிசிக்கடைக்காரரைப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்னு சொல்றே?"
லண்டனில் வசித்திருக்கும் சுந்தரலட்சுமியின் பால்ய சிநேகிதி திவ்யா கைப்பேசியில் காணொளி அழைப்பின் வாயிலாகப் பேசியவளாய் அவளிடம் கேட்டிருந்தாள்.
செந்திலிடம் பேசி ஒரு வாரம் கடந்த பின்பே தனது தாய் தந்தையரிடம் சம்மதத்தைத் தெரிவித்திருந்தாள் சுந்தரலட்சுமி.
பெற்றோரிடம் கூறிய பிறகு அடுத்ததாக அவள் கூறியிருந்தது திவ்யாவிடம் தான். அவளுக்கு அத்தனை நெருக்கமான தோழி அவள்.
"ஒரு ஆபிஸ்ல வேலை செய்றவனை விடச் சொந்த தொழில் செய்றவனுக்குத் தான் ஆளுமைத் திறன் அதிகமா இருக்குமாம். அக்கவுண்ட்ஸ், மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங், கஸ்டமர் சர்வீஸ்னு எல்லாப் பக்கமும் நாலட்ஜ் இருந்தா மட்டும் தான் ஒருத்தனால ஒரு பிசினஸை சக்சஸ்புல்லா நடத்த முடியுமாம்" என்று சிரிப்புடன் சுந்தரலட்சுமி உரைக்கவும்,
"யாரு? அந்த அரிசிக்கடைக்காரரே இதை உன்கிட்ட சொன்னாரா? அப்படியே அவர் பேச்சுல மேடம் தொபுகடீர்னு விழுந்துட்டீங்களாக்கும்" கேலிக்குரலில் திவ்யா கேட்க,
மெல்லிய நாணத்துடன் ஆமென உரைத்தவளாய் பூரிப்புடன் சிரித்தவளை வீடியோ காலில் பார்த்திருந்த திவ்யா,
"அடடா வெட்கம்லாம் வருதே என் ஃப்ரண்டுக்கு. உன்னையே வெட்கப்பட வச்ச அந்த அரிசிக்கடைக்காரரை நான் பார்த்தே ஆகனும்டி" என்றாள்.
"இதோ அனுப்புறேன்" என்றவளாய் திவ்யாவின் புலனத்திற்குச் செந்திலின் ஒளிப்படத்தை அனுப்பினாள் சுந்தரலட்சுமி.
வேஷ்டி சட்டையுடன் இருக்கும் அவனது படத்தைப் பார்த்த திவ்யா, "என்னடி! ஆளு பார்க்க பட்டிக்காட்டான் மாதிரி இருக்காரு. உனக்குச் செட் ஆகுமா?" எனக் கேட்டாள்.
"எனக்கும் போட்டோவைப் பார்க்கும் போது அப்படித் தான் தோணுச்சுடி. ஆனா நேர்ல பார்க்கும் போது அப்படி இல்லை. பேசிப் பார்த்தப்ப ஹீ இஸ் சோ டேலன்டட்னு புரிஞ்சிது. ஃப்யூசர் பிசினஸ் பத்தி நிறைய ஐடியாஸ் வச்சிருக்காரு. அவரோட இந்த அரிசிக்கடைக்கு இன்ஸ்டால எக்கச்சக்க ஃபாலோவர்ஸ் இருக்காங்க தெரியுமா. வாராவாரம் ஒவ்வொரு அரிசி வகைப் பத்தி யூ டியூப்ல வீடியோலாம் போடுறாரு.
இது எல்லாத்தையும் விட எது என்னை அவருக்கு ஓகே சொல்ல வச்சிது தெரியுமா திவ்யா?" என்று சுந்தரலட்சுமி நிறுத்த,
"எது உன்னை அவரை ஹெவியா லைக் பண்ண வச்சிது சுந்தரி? சொல்லு சுந்தரி சொல்லு!" வடிவேலு பாணியில் திவ்யா கேட்டதும் வாய்விட்டு சிரித்தாள் சுந்தரலட்சுமி.
"ஆக்சுவலி முதல் சிந்திப்பிலேயே இரண்டு பேரும் சண்ட தான் போட்டோம் திவ்யா. நான் கிண்டல் செஞ்சி அவரைக் கோபப்படுத்திட்டேன். கோபப்பட்டுப் பேசினாலும் அப்புறம் அவரே இறங்கி வந்து சாரி கேட்டாரு. அவர்கிட்ட துளியும் ஈகோ இருக்கிற மாதிரி தெரியலைடி. ஈகோ இல்லாத மனுஷனை மேனேஜ் செஞ்சிடலாம்" என்று சுந்தரலட்சுமி கூறவும்,
"ஹா ஹா ஹா.. மேரேஜ்னாலே கட்டிக்கிறவரை மேனேஜ் செய்றதுனு முடிவே செஞ்சிட்டியா?" என்று இடைவிடாது சிரித்திருந்தாள் திவ்யா.
"பின்னே, எல்லாரும் பெர்ஃபெக்ட்டா இருக்க மாட்டாங்க தானே. ஏதோ வகைல என்னை அவரும் அவரை நானும் அட்ஜஸ்ட் செஞ்சி மேனேஜ் செஞ்சி தானே ஆகனும். மேரேஜ்னாலே லவ் மட்டும் நிறைஞ்ச ஃபேரி வேர்ல்ட்னு நினைக்கிற வயசை கடந்தாச்சு திவ்யா. அதனால அவரும் அவரோட குடும்பமும் மேனேஜபிள்னு தோணினதால ஒத்துக்கிட்டேன்" என்றாள்.
"ஓகே! அதெல்லாம் சரி தான். ஆனா ஆளே பார்க்க இப்படி இருக்காருனா அவரோடது கன்சர்வேட்டிவ் ஃபேமிலியா இருந்தா உனக்குக் கஷ்டமாச்சே?" கவலைத் தோய்ந்த குரலில் திவ்யா கேட்க,
(*கன்சர்வேட்டிவ் ஃபேமிலி - மாற்றத்தை விரும்பாத; வழிவழி மரபில் பற்றுடைய; பழையன பேணுகிற குடும்பம்)
"செந்திலைப் பார்க்க அப்படித் தோணலைடி. ஒரு வேளை அவங்க அம்மா, மாமா குடும்பம்லாம் அப்படி இருக்கலாம். அவருக்கு அம்மா தான் இருக்காங்க. அப்பா செந்திலோட சின்ன வயசுலேயே இறந்துட்டாராம். அதுக்குப் பிறகு மாமா தான் இவங்களுக்குக் காட் ஃபாதர் மாதிரினு சொன்னாரு. தாய்மாமா மேல, அவரோட குடும்பத்து மேல ரொம்ப மரியாதையும் பாசமும் வச்சிருக்காரு. எங்க குடும்பத்துல இருக்க மொத்த பேரும் டாக்சிக் சொந்தங்கள் தான்டி. அதனாலேயே யார்கிட்டயும் நாங்க பேச்சு வச்சிக்கிறது இல்லை. அப்படி இல்லாம இப்படிப் பாசமா ஒன்னுக்குள்ள ஒன்னா உறுதுணையா ஒரு சொந்தம் அவங்களுக்கு இருக்குனும் போது எனக்குச் சந்தோஷமா தான் இருந்துச்சு திவ்யா. அதனாலேயே அவங்க கன்சர்வேட்டிவ்வா இருந்தாலும் அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம்னு நினைச்சிக்கிட்டேன்" என்றாள்.
"ஹ்ம்ம் உன் முடிவுல தெளிவா இருக்கனு புரியுது! அவர் டாக்சிக் பெர்சனா இல்லாத வரைக்கும் மேரேஜ் லைஃப்ல பிரச்சனை வராதுடி. அதுக்கு மேல உங்க இரண்டு பேரோட அன்டர்ஸ்டாண்டிங் தான் ஃலைப்பை கொண்டு போகும். ஆல் த பெஸ்ட்-டி மை பெஸ்டி! என் ஃப்ரண்டு கமிட் ஆகிட்டாஆஆஆ! ஹேப்பி ஃபார் யூ டி" என்று மனமார வாழ்த்தியவளாய் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்தாள் திவ்யா.
அதே நேரம் அங்கே செந்திலின் கடையில்!
"ஆன்லைன்ல ரெண்டு இருபத்தஞ்சு கிலோ மூட்டை புக் ஆகியிருக்கு. இன்னிக்கு போய் டெலிவரி செஞ்சிடு" தனது கடைக்காகவென வைத்திருக்கும் சமூக வலைத்தளத்தைப் பார்த்தவனாய் கடை வேலையாளிடம் உரைத்திருந்தான் செந்தில்.
அச்சமயம் ஸ்கார்பியோ காரில் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்தவராய் அரசியல்வாதி போல் வந்து இறங்கினார் செல்லத்துரை.
மாமனைப் பார்த்ததும் கடையிலிருந்து வெளியே வந்தவன், "வாங்க மாமா! என்ன இந்தப் பக்கம்? கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே! உட்காருங்க மாமா" என்று வரவேற்றவனாய் இருக்கையைக் காட்டி அமரப் பணித்தான்.
இருக்கையில் அமர்ந்தவரின் முகத்தில் தெரிந்த அதிருப்தியில் அவர் எதைப் பற்றிப் பேச வந்திருக்கிறார் என்று புரிந்தும் புரியாதவன் போல் அமைதியாய் நின்றவனாய்,
"டீ காபி எதுவும் குடிக்கிறீங்களா மாமா" எனக் கேட்டான்.
நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தவராய், "நான் உனக்கு ஏதாவது குறை வச்சிட்டேனா செந்திலு? இல்லனா ஊருல சொல்றது போல நான் தான் உன் கல்யாணத்தை நடக்க விடாம கெடுக்கிறேன்னு நினைக்கிறியா?" வருத்த தொனியில் அவர் கேட்கவும்,
"என்னாச்சு? ஏன் மாமா இப்படிலாம் பேசுறீங்க?" எனக் கேட்டான்.
"நான் வேண்டாம்னு சொன்ன பிறகும் சுந்தரலட்சுமி பொண்ணை நேர்ல போய்ப் பார்த்திருக்க! அந்தப் பொண்ணு வீட்டுல கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லிருக்க! இப்ப கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்னு அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்கனு கேட்கிறாங்கனு தரகர் வந்து சொன்னாரு. அப்ப நீ என் பேச்சை மதிக்கலைனு தானே அர்த்தம்" சற்றுச் சத்தமான குரலில் அவர் பேசவும்,
கடை வேலையாளிடம் திரும்பியவனாய், "நீ போய் ரெண்டு டீ வாங்கிட்டு வாடா" என்று அனுப்பிய செந்தில், அந்தப் பையன் வெளியே சென்ற பிறகு மாமனின் அருகில் அமர்ந்தவனாய், "அந்தப் பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு மாமா! மனப் பொருத்தத்தை விடப் பெரிய பொருத்தம் தேவையில்லனு நினைச்சேனே தவிர உங்களை அவமதிக்கனும்னுலாம் நினைக்கலை மாமா" என்றான்.
"நான் சொல்றதை கேளுடா செந்திலு! அந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா பாதிலேயே விவாகரத்து ஆகிடும்னு ஜோசியர் சொன்னாருடா. கோபக்கார பொண்ணாயிருக்கும். குடும்பத்துக்கு ஒத்து வராதுனு சொன்னாரு. அப்படிப் பொண்ணு உனக்குத் தேவையா சொல்லு" என்றவர் தன்மையாய் கூற,
"இது வரைக்கும் உங்க பேச்சை மீறி நான் நடந்துக்கிட்டது இல்ல மாமா! ஆனா இந்த விஷயத்துல என் முடிவை மாத்திக்கிறதா இல்லை மாமா! சுந்தரி தான் என் மனைவினு முடிவு செஞ்சிட்டேன்" என்றவனாய் எழுந்து நின்றான்.
கோபத்துடன் எழுந்தவராய் செல்லத்துரை, "நாளைக்குப் பிரச்சினைனு வந்து நின்னா பஞ்சாயத்துச் செய்ய நான் வர மாட்டேன். நான் முன்ன நின்னு இந்தக் கல்யாணத்தை நடத்த மாட்டேன். உன் கல்யாணத்துக்கும் என்னைக் கூப்பிடாத" என்று ஆக்ரோஷமான குரலில் உரைத்துவிட்டு விறுவிறுவென வெளியே சென்றிருந்தார்.
அவரது ஸ்கார்பியோ வண்டி செல்வதைப் பெருமூச்சுடன் பார்த்தவனாய் நாற்காலியில் அமர்ந்தவன், "அரேஞ்ச் மேரேஜ் செய்யலாம்னு பார்த்தா லவ் மேரேஜா தான் என் கல்யாணத்தைச் செய்ய விடுவாங்க போலேயே" என்று சிந்தித்தவாறு அடுத்த வேலையைப் பார்க்கலானான்.
அன்றிரவு வீட்டிற்குச் சென்ற செந்திலுக்கு உணவு பரிமாறியவாறே, "இன்னிக்கு உன் மாமா நம்ம வீட்டுக்கு வந்தாருடா" என்றார் அவனின் அன்னை மீனா.
"என்னவாம்?" அதே விஷயம் தெரிந்தும் தெரியாத பாவனையில் கேட்டிருந்தான்.
"ஏதோ லட்சுமினு பேருள்ள பொண்ணைத் தான் கட்டிப்பேன்னு அடம்பிடிக்கிறியாமே! அந்தப் பொண்ணோட ஜாதகத்தை நீயே ஜோசியர்கிட்ட வந்து பாருனு என்னைக் கூட்டிட்டுப் போனாரு!" என்றார்.
நெற்றிச் சுருங்க, "ஓ" என்றவன், "ஜோசியர் என்ன சொன்னாரு?" எனக் கேட்டவாறே இரவுணவை உண்டான்.
"பையனுக்குக் கோளாறுள்ள ஜாதகம்! அதுக்கேத்த பொண்ணு ஜாதகம் இது இல்ல. இந்தப் பொண்ணை உங்க பையன் கட்டிக்கிட்டா ஆறு மாசத்துலயே அந்தப் பொண்ணு விவாகரத்து வாங்கிட்டு போய்டும்னு சொன்னாரு" என்றார்.
செல்லத்துரை ஜோசியரிடம் பணத்தைக் கொடுத்து செந்திலின் தாயிடம் இவ்வாறு உரைக்கக் கூறியிருந்தார்.
"ஹ்ம்ம் சரி" என்றவன் சொல்லவும்,
"என்னடா நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்! இந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வேண்டாம்" என்று கட்டளையாய் மீனா உரைத்து விட்டு சமையலறைக்குள் சென்று விட, கை கழுவி விட்டு வந்தவனாய் அன்னையிடம் சென்றவன், "இந்தப் பிறவில எனக்கு மனைவினா அது சுந்தரலட்சுமி மட்டும் தான்மா. இந்தப் பொண்ணை நான் கட்டிக்கக் கூடாதுனு தடுத்தீங்கனா நான் ஆயுசுக்கும் கல்யாணமே செஞ்சிக்காம இப்படியே இருந்துடுவேன்" அமைதியாக உரைத்தவனாய் விறுவிறுவென மொட்டை மாடிக்குச் சென்றிருந்தான்.
மகனின் வாழ்வை எண்ணி கவலைக் கொண்டவராய், "பெருமாளே நீ தான் என் புள்ள வாழ்க்கையைக் காப்பாத்தனும்" என்று இறைவனிடம் புலம்பி வைத்தார்.
மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்தவனாய் தோழனுக்கு அழைத்தவன் இன்று நடந்தவைகளைப் புலம்பி வைத்தான்.
"பயமா இருக்குடா சரவணா! எனக்கு ஜாதகத்துக்கு மேல நம்பிக்கை இல்லை தான். ஆனாலும்.." என்றவன் தடுமாற,
"ஜோசியர் சொல்ற மாதிரி நடந்திடுமோனு பயமா இருக்கா?" எனக் கேட்டான் சரவணன்.
"இல்லடா எங்கம்மாவை நினைச்சு பயமா இருக்குடா! கல்யாணத்துக்குப் பிறகு எங்களுக்குள்ள சின்னச் சண்டை வந்தாலும் இந்த ஜாதக விஷயத்தைச் சொல்லியே எங்களைப் பிரிய வச்சிடுவாங்களோனு பயமா இருக்கு" வருத்தமான குரலில் உரைத்தான்.
"என்னடா நீ! இன்னும் வாழவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள பிரிவைப் பத்தி பேசிட்டு இருக்க! வாழுறதைப் பத்தி யோசிடா! யார் என்ன சொன்னாலும் இந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கிறதுல உறுதியா இருக்கத் தானே?" என்றவன் கேட்கவும்,
"ஆமா" என்றான்.
"அப்புறம் என்ன? கல்யாண வேலையைப் பாருடா! உன் மாமன்காரன் உன் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்த மாட்டேன்னு சொன்னா, நான் இருக்கேன்! உனக்காக ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஒரு கையெழுத்து போட மாட்டேனா என்ன" என்று சரவணன் சிரிக்க,
"லவ் மேரேஜ் மாதிரி பதிவு திருமணம் தான் செய்யப் போறேன்னு முடிவே பண்ணிட்டியாடா" என்று சிரித்த செந்தில், "நாளைக்கு நானே சுந்தரி வீட்டுல போய்ப் பேசுறேன்" என்றவனாய் இணைப்பைத் துண்டித்தவன் சுந்தரி நினைவிலேயே உறங்கிப் போனான்.
மறுநாள் காலை சுந்தரலட்சுமியின் வீட்டிற்குச் செல்ல அவன் கிளம்பிக் கொண்டிருந்த போது வந்து நின்றார் அவனின் அத்தை காஞ்சனா.

Last edited:
Author: Narmadha Subramaniyam
Article Title: உனதன்பின் கதகதப்பில் 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.